ஐசிசி டெஸ்ட் தரவரிசைப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில், கோலி, ரோகித், அஷ்வின் ஆகியோர் டாப் 10 பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.
வங்கதேசத்தின் லிட்டன் தாஸ் மற்றும் இலங்கையின் மூத்த வீரர் ஆஞ்சலோ மேத்யூஸ் ஆகியோர் ஐசிசி டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் முத்தாய்ப்பான இடங்களைப் பிடித்துள்ளனர்.
இந்தப் பட்டியலில் ரோகித் சர்மாவுக்கு 8வது இடமும், விராட் கோலி 10வது இடமும் பிடித்துள்ளனர். மார்னஸ் லபுஸ்கேஞ் முதலிடத்தில் உள்ளார்.
பவுலிங்கை பொறுத்தவரை பேட் க்யூமின்ஸ் 901 புள்ளிகள் பெற்றுள்ளார். இவர் ரவிச்சந்திரன் அஸ்வினைவிட 51 புள்ளிகள் அதிகமாகப் பெற்றிருக்கிறார். அஸ்வினைத் தொடர்ந்து ஜஸ்ப்ரீத் பும்ரா உள்ளார். இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா ஆல் ரவுண்டர் டேபிளில் இடம் பெற்றுள்ளார். அதில் முதலிடத்தில் உள்ளார்.
வங்கதேச விக்கெட் கீப்பர் மற்றும் பேட்டர் லிட்டன். இவர் 17வது இடத்தில் உள்ளார். வங்கதேசத்தின் முஷ்ஃபிகுர் ரஹிம் மற்றும் தமீம் இக்பால் ஆகியோர் பட்டியலில் முன்னேறியுள்ளனர். முஷ்ஃபிகுர் ரஹிம் 25வது இடத்தில் உள்ளார். தமீம் 27 வது இடத்தில் உள்ளார்.
பவுலர்கள் ராங்கிங்கில் வங்கதேசத்தின் ஷேக் அல் ஹசன் 29வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். ஸ்பின்னர் நயீம் ஹசன் 53வது இடத்தில் உள்ளார். 105 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதால் அவருக்கு இந்த இடம் கிடைத்துள்ளது.
இலங்கை பவுலர் கசுன் ரஜிதா 61வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். முன்னதாக இவர் 75வது இடத்தில் இருந்தார். அசிதா ஃபெர்னாண்டோ டாப் 100 பட்டியலில் உள்ளார்.
டாப் 10 நாடுகள் மற்றும் புள்ளிகள்:
1. ஆஸ்திரேலியா 2439 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.
2. இந்தியா 2736 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது.
3 நியூசிலாந்து 2552 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தில் உள்ளது.
4 தென் ஆப்பிரிக்கா 2306 புள்ளிகளுடன் நான்காம் இடத்தில் உள்ளது.
5 பாகிஸ்தான் 1865 புள்ளிகளுடன் ஐந்தாம் இடத்தில் உள்ளது.
6 இங்கிலாந்து 2551 புள்ளிகளுடன் ஆறாம் இடத்தில் உள்ளது.
7 இலங்கை 1384 புள்ளிகளுடன் ஏழாம் இடத்தில் உள்ளது.
8 வெஸ்ட் இண்டீஸ் 1685 புள்ளிகளுடன் எட்டாவது இடத்தில் உள்ளது.
9 வங்கதேசம் 823 புள்ளிகளுடன் ஒன்பதாவது இடத்தில் உள்ளது.
10 ஜிம்பாப்வே 148 புள்ளிகளுடன் பத்தாவது இடத்தில் உள்ளது.
டாப் 10 வீரர்கள்:
1 மார்னஸ் லாப்ஸ்கேஞ்: ஆஸ்திரேலியா
2 ஸ்டீவ் ஸ்மித்: ஆஸ்திரேலியா
3 கென் வில்லியம்சன்: நியூசிலாந்து
4 ஜோ ரூட்: இங்கிலாந்து
5 பாபர் அசாம்: பாகிஸ்தான்
6 டிமுத் கருணாரத்னே: இலங்கை
7 உஸ்மான் கவாஜா: ஆஸ்திரேலியா
8 ரோஹித் சர்மா: இந்தியா
9 ட்ராவிஸ் ஹெட்: ஆஸ்திரேலியா
10 விராட் கோலி: இந்தியா