பங்களாதேஷ்-இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி தாகாவில் நடைபெற்று வருகிறது. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற பங்களாதேஷ் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதைத் தொடர்ந்து பங்களாதேஷ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் டக் அவுட்டாகினர். அதன்பின்னர் முஸ்ஃபிகூர் ரஹிம் மற்றும் லிட்டன் தாஸ் அணியை சரிவில் இருந்து மீட்டு வருகின்றனர். 


இந்நிலையில் இன்றைய போட்டியில் ஆட்டத்தின் 23வது ஓவரில் இலங்கை வீரர் குஷால் மெண்டீஸ் ஆடுகளத்தில் கீழே விழுந்துள்ளார். அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து அவரை மருத்துவர்கள் பரிசோதனை செய்துள்ளனர். அவருக்கு ஏற்கெனவே காலை முதல் சில உடல் நல குறைவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன் அவர் அஜீரன பிரச்னை காரணமாக அவதிப்பட்டு வந்ததாக தெரிகிறது. 


 






இந்தச் சூழலில் தற்போது அவர் மேல் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படும் என்று பங்களாதேஷ் கிரிக்கெட் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பங்களாதேஷ்-இலங்கை அணிக்கு எதிரான முதல் போட்டியில் குஷால் மெண்டீஸ் முதல் இன்னிங்ஸில் அரைசதமும் இரண்டாவது இன்னிங்ஸில் 48 ரன்களும் எடுத்து போட்டி டிரா செய்ய முக்கிய காரணமாக திகழ்ந்தார். 


 




இரண்டாவது டெஸ்ட் போட்டியில் குஷால் மெண்டீஸ் பங்கேற்பது தொடர்பாக இந்த சிகிச்சைக்கு பிறகு தான் தெரிய வரும் என்று கருதப்படுகிறது. பங்களாதேஷ் அணி தற்போது வரை 5 விக்கெட் இழந்து 226 ரன்கள் எடுத்துள்ளது. லிட்டன் தாஸ் சதம் கடந்து விளையாடி வருகிறார். முஸ்ஃபிகூர் ரஹிம் 88* ரன்களுடன் களத்தில் ஆடி வருகிறார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண