இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இருந்து இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் கே.எல்.ராகுல் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ராஞ்சி டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக இந்திய அணியின் இணைய வேண்டும் என முகேஷ் குமாருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் குமார் இந்திய அணிக்கு திரும்பியுள்ள நிலையில், மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக விடுவிக்கப்பட்டார். 


பும்ராவுக்கு ஓய்வு ஏன்..? 


இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் பிப்ரவரி 23ம் தேதி தொடங்குகிறது. ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-1 என முன்னிலை வகிக்கிறது. 


தொடர்ந்து விளையாடி வருவதாலும், இங்கிலாந்துக்கு எதிரான நீண்ட டெஸ்ட் தொடரை கருத்தில் கொண்டும் பும்ரா விடுவிக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. அதேசமயம், உடற்தகுதி காரணமாக கே.எல்.ராகுல் நான்காவது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியுள்ளார். மூன்றாவது டெஸ்ட் போட்டியில் கூட ராகுல் காந்தி விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, தர்மசாலாவில் நடக்கும் கடைசி மற்றும் 5வது டெஸ்ட் போட்டியில் விளையாடுவாரா இல்லையா என்பது உடற்தகுதியை பொறுத்தே தெரியும். 


நீக்கப்படுவரா ரஜத் படிதார்..? 


மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு முன் கே.எல்.ராகுலுக்கு பதிலாக தேவ்தத் படிக்கல் அணியில் சேர்க்கப்பட்டார். 4வது டெஸ்டிலும் கே.எல்.ராகுல் இல்லாத நிலையில் படிக்கல் அணியுடன் இணைந்திருப்பார். மேலும், நான்காவது டெஸ்டில் படிக்கல் அறிமுகமாகும் வாய்ப்பு கிடைக்கலாம். 23ம் தேதி ராஞ்சியில் தொடங்கும் நான்காவது டெஸ்டில் இந்திய அணியில் இருந்து ரஜத் படிதார் நீக்கப்படலாம். ரஜத் படிதார் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் அதாவது நான்கு இன்னிங்ஸ்களில் ஒரு அரை சதம் கூட அடிக்கவில்லை.


முன்னிலையில் இந்திய அணி: 


5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான அணி 2-1 என முன்னிலை பெற்றுள்ளது. முதல் போட்டியில் இங்கிலாந்தும், இரண்டாவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றன. ராஜ்கோட்டில் நடந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்று 2-1 என முன்னிலை பெற்றது. தற்போது ராஞ்சியில் நடைபெறும் போட்டியில் வெற்றிபெற்று தொடரை கைப்பற்ற வேண்டும் என இந்திய அணி விரும்புகிறத். அதே சமயம் இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் எப்படியும் தொடரை சமன் செய்ய முயற்சி செய்வார். இதுபோன்ற சூழ்நிலையில் நான்காவது டெஸ்ட் மிகவும் கடினமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


நான்காவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி: 


ரோஹித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மான் கில், ரஜத் படிதார், சர்பராஸ் கான், துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), கே.எஸ்.பாரத் (விக்கெட் கீப்பர்), தேவ்தத் படிக்கல்,ஆர்.அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், முகேஷ் குமார், ஆகாஷ் தீப்.


இங்கிலாந்து அணி:


பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ரெஹான் அகமது, ஜேம்ஸ் ஆண்டர்சன், கஸ் அட்கின்சன், ஜானி பேர்ஸ்டோ (விக்கெட் கீப்பர்), ஷோயப் பஷீர், ஹாரி புரூக், சாக் க்ராலி, பென் டக்கெட், பென் ஃபோக்ஸ் (விக்கெட் கீப்பர்), டாம் ஹார்ட்லி, ஜாக் லீச், ஒல்லி போப், ஆலி ராபின்சன், ஜோ ரூட்சன் , மார்க் வூட்