உதவி செய்த கே.எல்.ராகுல்:
இந்திய கிரிக்கெட் அணி வங்கதேச அணிக்கு எதிரான போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி வெற்றி பெற்றது. மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டி நேற்று (அக்டோபர் 6) நடைபெற்றது.
இதில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி அபரா வெற்றி பெற்றது. இதனிடையே டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியில் விளையாடிய கே.எல்.ராகுல் மாணவர் ஒருவருக்கு உதவி செய்த சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அதாவது, கர்நாடக மாநிலம் பாகல்கோட் மாவட்டத்தில் உள்ள மகாலிங்கபூரில் வசிக்கும் அம்ருத் மாவினகட்டி என்ற மாணவரின் கல்வி செலவை கே.எல்.ராகுல் ஏற்றிருக்கிறார். ஹுப்பள்ளியின் சமூக சேவகர் மஞ்சுநாத் ஹெபசூர் மூலம் அம்ருத்துக்கு கே.எல்.ராகுல் உதவியுள்ளார். இதன் மூலம் அம்ருத் என்ற மாணவர் பட்டப்படிப்பு BVB கல்லூரி வளாகத்தில் உள்ள KLE தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் முதல் ஆண்டு படிப்படிப்பை படித்துள்ளார்.
அந்தவகையில் அம்ருத்தின் கல்லூரியில் முதலாம் ஆண்டுக்கான முழு கட்டணத்தையும் கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல் தான் ஏற்றிருக்கிறார்.தனது வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், கே.எல்.ராகுல் தற்போது அம்ருத்தின் இரண்டாம் ஆண்டு கல்லூரிக் கட்டணத்தையும் செலுத்தியுள்ளார்.
ஹுப்பள்ளியில் செய்தியாளர்களிடம் அம்ருத் கூறுகையில், "கடந்த ஆண்டு, கே.எல்.ராகுல் கல்லூரியில் சேர்க்கை பெற உதவினார். முதல் வருடத்தில் 9.3 CGPA மதிப்பெண்ணையும் பெற்றேன். அவர் தனது வார்த்தைகளில் உறுதியாக இருக்கிறார், மேலும் எனது இரண்டாம் ஆண்டு படிப்புக்காக ரூ.75,000 செலுத்தியுள்ளார். எனது படிப்பைத் தொடர நிதி உதவி செய்த கே.எல்.ராகுல், மஞ்சுநாத் ஹெபசூர் மற்றும் பாகல்கோட்டைச் சேர்ந்த நிதின் ஆகியோருக்கு நன்றி. கல்வியில் சிறந்து விளங்க நான் தொடர்ந்து முயற்சி செய்வேன்,” என்றார் அம்ருத்.