உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் லக்னோவில் 36வது அகில இந்திய வழக்கறிஞர் கிரிக்கெட் போட்டியை தொடங்கி வைத்து தனது பேட்டிங் திறமையை வெளிப்படுத்தினார்.


வைரல் வீடியோ:


உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் அகில இந்திய வக்கறிஞர் கிரிக்கெட் போட்டி நேற்று  தொடங்கியது.இதில் அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கலந்து கொண்டார். பின்னர் நிகழ்ச்சியை தொடங்கி வைத்த அவர் கிரிக்கெட் விளையாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.  நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் யோகி ஆதித்யநாத் , தனிப்பட்ட மற்றும் பொது வாழ்வில் வெற்றி பெறுவதற்கு குழு உணர்வு மற்றும் நெகிழ்ச்சித்தன்மையை வளர்ப்பதில் விளையாட்டின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.






குடும்ப வாழ்க்கையாக இருந்தாலும் சரி, பொது வாழ்வாக இருந்தாலும் சரி, நம் அனைவரையும் குழு மனப்பான்மையுடன் செயல்பட விளையாட்டு தூண்டுகிறது. குழுவாக செயல்படும் திறன் இருந்தால், நமது வெற்றி வாய்ப்புகள் கணிசமாக அதிகரிக்கும்," என்றார் முதல்வர். கடினமான சூழ்நிலைகளில் விளையாட்டு எவ்வாறு உத்வேகத்தை அளிக்கிறது என்பதையும், கூட்டு முயற்சி மற்றும் உறுதியுடன் சவால்களை சமாளிக்க தனிநபர்களுக்கு கற்பிப்பதையும் அவர் வலியுறுத்தினார்.


 






இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், லக்னோவில் 36வது அகில இந்திய வழக்கறிஞர் கிரிக்கெட் போட்டியின் தொடக்க விழாவில் கலந்து கொண்டேன். கடந்த 10 ஆண்டுகளில், மாண்புமிகு பிரதமர் திரு நரேந்திர மோடியின் வழிகாட்டுதலின் கீழ், நாட்டில் விளையாட்டு நடவடிக்கைகள் விரிவடைந்துள்ளன. 'கேலோ இந்தியா' மற்றும் 'ஃபிட் இந்தியா இயக்கம்' ஆகியவை விளையாட்டு மற்றும் உடல் தகுதியை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்துள்ளன."என்று கூறியுள்ளார்.


வக்கீல் விபத்து மரணம் அடைந்தால் வழங்கப்படும் இழப்பீடு ரூ.1.5 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதாக முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.அகில இந்திய வழக்கறிஞர் கிரிக்கெட் போட்டி என்பது நாடு முழுவதும் உள்ள வக்கீல்களிடையே தோழமை மற்றும் உடற்தகுதியை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட நடத்தப்படுவதாகும்.