சனிக்கிழமை நடைபெற்ற இங்கிலீஷ் பிரீமியர் லீக் போட்டியில் மான்செஸ்டர் யுனைடெட் 4-0 என்ற கோல் கணக்கில் பிரைட்டனிடம் தோற்றது. இந்த தோல்விக்குப் பிறகு, மான்செஸ்டர் யுனைடெட் லீக் அட்டவணையில் ஆறாவது இடத்திற்கு தள்ளப்பட்டது. அதுமட்டுமின்றி அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் லீக்கில் விளையாடுவதற்கான வாய்ப்பும் பறிபோனது. EPL இன் முதல் 4 அணிகள் மட்டுமே சாம்பியன்ஸ் லீக்கில் இடம் பெறுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம், மான்செஸ்டர் யுனைடெட் யூரோபா லீக் போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்புகளும் குறைகின்றன. மான்செஸ்டர் யுனைடெட்டின் இந்த நிலையைப் பார்த்து, முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கை டேக் செய்து ஒரு ட்வீட் செய்தார், அதில் இருவருக்கும் இடையே நீண்ட விவாதம் நடந்தது.
யுவராஜ் சிங் மான்செஸ்டர் யுனைடெட்டின் தீவிர ரசிகர் என்பதால் அந்த அணி தோற்றதும் கெவின் பீட்டர்சன் யுவராஜை வம்பிற்கு இழுத்தார். கெவின் பீட்டர்சன் செல்சியா அணியின் ரசிகர். கடந்த ஆண்டும் இதேபோல இவர்கள் இருவருக்கும் பிடித்த கால்பந்து கிளப் தொடர்பாக மோதல் ஏற்பட்டது. இந்த முறையும் அப்படித்தான் நடந்தது.
EPLல் மான்செஸ்டர் யுனைடெட் தோற்றவுடன், 'யுவராஜ் சிங் எங்கே இருக்கிறார் என்று யாருக்காவது தெரிந்தால், இந்த மோசமான நேரத்தில் நான் அவரைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறேன் என்று அவரிடம் சொல்லுங்கள்' என்று பீட்டர்சன் ட்வீட் செய்தார். பீட்டர்சன் இந்த வார்த்தைகளுடன் சிரிக்கும் ஸ்மைலியையும் பதிவிட்டிருந்தார். பதிலுக்கு யுவராஜ் உடனடியாக ரிப்ளை செய்தார். யுவராஜ், 'நன்றி நண்பரே, சாம்பியன்ஸ் லீக்கின் போது நானும் உங்களைப் பற்றி நினைத்தேன்' என்று எழுதினார்.
சாம்பியன்ஸ் லீக்கின் காலிறுதிப் போட்டியில் தோல்வியடைந்த பின்னர் செல்சியா அணி வெளியேறியது, அதனை குறிப்பிட்டுதான் யுவராஜ் அப்படி கூறினார். பீட்டர்சனும் நிறுத்தாமல் திரும்ப ஒரு ட்வீட் செய்தார். 'சாம்பியன்ஸ் லீக் என்றால் என்ன தெரியுமா' என்று அவர் எழுதினார், அதற்கு யுவராஜ், 'இல்லை, எனக்குத் தெரியாது, உங்களிடம் விளையாட்டு பற்றிய அனைத்து தகவல்களும் உள்ளன, அதை ஏன் முழு ட்விட்டர் உலகத்திற்கும் சொல்லக்கூடாது' என்று பதிலளித்தார்.
இது குறித்து பீட்டர்சன் எழுதுகையில், 'இது செல்சியா விளையாடும் போட்டி, மான்செஸ்டர் யுனைடெட் அல்ல. ஐரோப்பாவின் சிறந்த அணிகள் விளையாடும் போட்டி இது. இந்த முறை சாம்பியன்ஸ் லீக்கின் 'ரவுண்ட் ஆஃப்-16' இல் இருந்து மான்செஸ்டர் யுனைடெட் வெளியேறியதால் பீட்டர்சன் இதை எழுதினார், அதோடு செல்சியா கால் இறுதிக்கு சென்றிருந்தது.
ஆதற்கு யுவராஜ் சிங், "உங்கள் சிறந்த அணி எத்தனை EPL டைட்டில் வெற்றி பெற்றுள்ளது சார்?" என்று கிண்டலாக கேட்டார். அதற்கு பீட்டர்சன், "அது இல்லைதான், ஆனால் அடுத்த இரண்டு வருடங்களுக்கு உங்களுக்கு கப் இல்லை என்பது உறுதி", என்றார் அதற்கு பதிலளித்த யுவராஜ், "முதலில் கப் ஜெய்ச்சுட்டு பேசுங்க" என்று பதிலளித்து வாயில் விரல் வைக்கும் ஸ்மைலியை பதிவிட்டிருந்தார். நீண்ட நாட்களாக இரு வீரர்களும் தங்களுக்குப் பிடித்த அணியே சிறந்த அணி என்று பரஸ்பரம் தங்களுக்குப் பிடித்த அணியிடம் கூறி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.