இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் விளையாட்டு வீரர் பென் ஸ்டோக்ஸ் கடந்த திங்கள் அன்று ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ஆனால் அவரது அறிவிப்பு முன்னாள் ஆட்டக்காரர் கெவின் பீட்டர்சன்னின் வார்த்தைகளை ஒட்டியதாக இருந்தது. கடந்த ஜூன் 2012 இல் கெவின் பீட்டர்சன் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தபோது அவர் வெளியிட்ட அறிக்கையிலிருந்து ஈர்க்கப்பட்டதாக பென் ஸ்டோக்ஸின் அறிவிப்பு தற்போது இருக்கிறது.
இதை ஒட்டி தற்போது கருத்து தெரிவித்துள்ள கெவின் பீட்டர்சன் தான் ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றதை அடுத்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் வேண்டுமென்றே தன்னை டி20 போட்டிகளில் இருந்து தடைசெய்ததாக மறைமுகமாக பென் ஸ்டோக்ஸுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் ட்வீட் செய்திருக்கிறார்.
அவரது ட்வீட்டில் “அணியின் கிரிக்கெட் அட்டவணை பயங்கரமானது என்றும் என்னால் சமாளிக்க முடியவில்லை என்றும் நான் ஒருமுறை சொன்னேன், அதனால் நான் ODI கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றேன். ஆனால் வாரியம் என்னை T20 களில் இருந்தும் தடை செய்தது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
2012ல் ஓய்வு அறிவித்தபின் பீட்டர்சன் அடுத்த ஆண்டு இங்கிலாந்தின் ஒருநாள் மற்றும் T20 அணிகளில் தற்காலிகமாக மீண்டும் சேர்ந்தார். ஆனால் அவரது வாதம் தெளிவாக இருந்தது: அவர் அதிக விளையாட்டு காரணமாகவும் மேலும் போதுமான முக்கியத்துவம் இல்லாத கடுமையான அட்டவணையால் உளவியல் ரீதியாகவும் உடல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டிருந்தார். ஸ்டோக்ஸின் முடிவும் அதே காரணத்தால் தற்போது வழிநடத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.