ஜெயிச்சிட்டு வரேன்.. இது தான் 15 வயதான குமார் கார்த்திகேயா வீட்டை விட்டு வெளியே வரும்போது, தன்னுடைய தாய் தந்தையிடம் சொல்லிவிட்டு வந்தது. இன்று 9 ஆண்டுகள்.. 3 மாதத்திற்கு பின் மீண்டும் வீடு திரும்பி குடும்பத்துடன் இணைந்துள்ள குமார் கார்த்திகேயாவின் கதை.. வாழ்க்கையில் ஜெயிக்க போராடும் ஒவ்வோரு சாமானிய இளைஞனுக்கும் உந்து சக்தி..


உத்திரப் பிரதேசத்தில் 1997ம் ஆண்டு பிறக்கிறார் குமார் கார்த்திகேயா. கிரிக்கெட்டின் மீது அளவில்லாத காதல் கொண்டிருந்த இவருக்கு, குடும்ப பொருளாதார நிலை ஒத்துழைக்கவில்லை. உத்திர பிரதேசத்தில் கான்ஸ்டபில் பணியிலிருந்த தனது தந்தைக்கு கஷ்டம் கொடுக்கவும் விருப்பமில்லை. 15 வயதில் வீட்டை விட்டு வெளியேரும் கார்த்திகேயா, எனக்கென்று ஒரு பெயரை நான் என்று சம்பாத்திக்கிறேனோ.. அன்று வீடு திரும்புகிறேன் என்கிறார். டெல்லி.. புதிய மாநிலம்.. அங்கு யாரையும் தெரியாது. தன்னுடைய நண்பர் ராதே ஷ்யாமுடன் ஒவ்வோரு கிரிக்கெட் அகாடமியாக ஏறி இறங்குகிறார் கார்த்திகேயா.


அப்போதுதான் கிரிக்கெட் பயிற்சியாளர் பரத்வாஜை சந்திக்கும் கார்த்திகேயா, தன்னிடம் திறமையும் ஆர்வமும் இருக்கிறது, ஆனால் பயிற்சிக்கு கொடுக்க பணமில்லை என்கிறார். சரி உன் திறமையை காமி என்று கார்த்திகேயாவை நோக்கி பந்தை வீசுகிறார் பரத்வாஜ்.. பயிர்சியாளர் முன்னிலையில் கிரிக்கெட் நெட்சில், தன்னுடைய முதல் பந்தை வீசுகிறார் கார்த்திகேயா.. ஒரே பால் தான் வீசினார் “விரல்களை பயன்படுத்தி கார்த்திகேயா வீசிய பந்தை கண்டு” நாளை முதல் பயிற்சிக்கு என்று கூறி இலவசமாக பயிற்சி தர ஒப்புகொள்கிறார்.




கிரிக்கெட் பயிற்சி கிடைத்துவிட்டது, ஆனால் டெல்லியில் தங்க வேண்டும்.. உணவு உண்ண வேண்டும். அதற்கு என்ன செய்வது.. கிரிக்கெட் அகாடமி அமைந்துள்ள பகுதியிலிருந்து, 80 கி.மீ  தொலைவில் உள்ள ஒரு தொழிற்சாலையில் வேலைக்கு செல்கிறார். இரவு முழுவதும் ஃபாக்டரியில் வேலை.. பகல் முழுவதும் கிரிக்கெட் பயிற்சி.. பயிற்சி முடிந்தவுடன் சிறிய ஓய்வு, பின்னர் மீண்டும் வேலை.. பயிற்சி..


80 கிமீ தொலைவிலுள்ள கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி மேற்கொள்ள, தினசரி பல மைல் தூரம் நடந்து வந்துள்ளார். ஏன் பொது போக்குவரத்தை பயன்படுத்தலாமே என்றால், 10 ரூபாய்க்கு ஒரு பிஸ்கட் பாக்கெட் வாங்கி சாப்பிட.. கொஞ்சம் நடந்து தான் ஆக வேண்டும்.


ஒரு நாள் இத்தனை கிலோ மீட்டர் பயணித்து கார்த்திகேயா வந்து செல்வதை அறிந்த பயிற்சியாளர் பரத்வாஜ், இங்கே தங்க வேண்டியது தானே என கேட்கிறார். தொழிற்சாலையின் இரவு பணி குறித்து சொல்கிறார். உடனே கிரிக்கெட் அகாடமியின் சமையல் காரர்கள் தங்க இருக்கும் அறையில், நீயும் தங்கிக்கொள் என்று இடம் தருகிறார் பரத்வாஜ். கிரிக்கெட் அகாடமியில் தங்கும் முதல் நாள், அங்கு சமைக்கப்பட்ட உணவு கார்த்திகேயாவிற்கு பரிமாறப்படுகிறது. தட்டை கையில் வாங்கிய கார்த்திகேயா, உடனடியாக அதை சாப்பிடவில்லை. மாறாக கற்றி கதறி அழுகிறார். முதல் வாய் எடுத்து வைக்கும் அவர், தான் ஒரு வருடமாக மதிய உணவு உண்ணவில்லை என்கிறார்.


 






டெல்லி கிரிக்கெட் சங்கத்தின் பள்ளிகளுக்கான கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் கார்த்திகேயா, 45 விக்கெட்களை வீழ்த்தி அனைவரின் கிவனத்தையும் ஈர்க்கிறார். பல தொடர்களில் ஆட்ட நாயகன் விருது பெரும் கார்த்திகேயா.. டெல்லி கிரிக்கெட் வட்டாரத்தில் மெதுவாக தன்னுடைய பெயரை பதிய வைக்கிறார். ஆனாலும் டெல்லி கிரிக்கெட் சங்க அணியின் பட்டியலில் கார்த்திகேயாவிற்கு இடம் கிடைக்கவில்லை.. இங்கு இல்லை என்றால் என்ன? திறமையும் சாதிக்க துடிக்கும் வேகமும் நிறைந்த கார்த்திகேயாவை மத்திய பிரதேசத்திற்கு  டிவிஷன் லீகில் விளையாட அனுப்பி வைக்கிறார் பரத்வாஜ். அங்கும் 50 பிளஸ் விக்கெட் வீழ்த்தி அலற விடுகிறார்.


மத்திய பிரதேசத்தின் தகுதி போட்டிகளில் பங்கேற்கும் அவர், ஒவ்வோரு போட்டியிலும் 5 விக்கெட்களை வீழ்த்துகிறார். தன்னுடைய பர்ஃபாமன்ஸ் மூலம் மத்திய பிரதேசத்தின் அண்டர் 23 ரஞ்சி அணியில் நுழைகிறார். அதுவரை விரல்களை மட்டுமே பயன்படுத்தி பந்துகளை வீசி வந்த கார்த்திகேயா, போட்டிகள் முடிந்து நள்ளிரவு திரும்பியதும், 2-3 மணி நேரம் நெட்சில் பந்து வீசுகிறார். wrist spin என்னும் மணிக்கட்டை பயன்படுத்தி பந்து வீசும் யுத்தியை கற்றுக்கொள்கிறார். இது அவரை wrist spin, finger spin, wrong uns, carrom ball என அனைத்து விதமான ஸ்பின் பந்துகளையும் வீச கூடிய மிஸ்டரி ஸ்பின்னராக மாற்றுகிறது.


இப்படி பட்ட திறமையை கண்ட மும்பை இந்தியன்ஸ் அணி, அவரை ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் களமிறக்குகிறது. முதல் ஓவரே சஞ்சு சாம்சன் விக்கெட்டை வீழ்த்துகிறார். 4 போட்டியில் பங்கேற்கும் இவர் 5 விக்கெட்களை வீழ்த்துகிறார். அதை தொடர்ந்து மத்திய பிரதேசத்தின் ரஞ்சி அணியில் விளையாடும் கார்த்திகேயா, முதல் முறையாக மத்திய பிரதேசம் ரஞ்சி கோப்பையை ஏந்த காரணமாக அமைகிறார். மும்பை அணியுடனான இறுதி போட்டியில் 9 விக்கெட்களை வீழ்த்தும் இவர், தொடரில் ஒட்டுமொத்தமாக 32 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.


இத்தனையும் செய்துவிட்டார்.. மும்பை முதல் டெல்லி வரை குமார் கார்த்திகேயாவின் பெயர் பதிந்துவிட்டது. 9 ஆண்டுகள் 3 மாதத்திற்கு பிறகு வீடு திரும்பிய கார்த்திகேயா தன்னுடைய அம்மாவை சந்தித்து ஜெயித்து விட்டேன் அம்மா என்று சொன்ன மொமெண்ட் கிரிக்கெட் வரலாற்றில் யாராலும் மறக்க முடியாதது. ஒரு உதவும் மணபான்மை கொண்ட நல்ல ஆசிரியரிடம், ஒரு திறமையான மாணவன் கிடைத்தால் என்ன நடக்கும் என்பதற்கு.. பரத்வாஜும் குமார் கார்த்திகேயாவுமே சாட்சி!




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண