இந்திய கிரிக்கெட் அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று வருகிறது. இதில் ஒருநாளை தொடரை இந்திய அணி வென்றது. அதன்பின்னர் தற்போது டி20 தொடர் நடைபெற்று வருகிறது. அதில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. 


 


இந்நிலையில் நான்காவது டி20 போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பங்கேற்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் ரோகித் சர்மாவிற்கு பேட்டிங்கின் போது காயம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து அவர் களத்திலிருந்து வெளியேறினார். இதன்காரணமாக அவர் கடைசி 2 டி20 போட்டிகளில் பங்கேற்பாரா என்ற சந்தேகம் எழுந்தது. 


 


இந்தச் சூழலில் ரோகித் சர்மாவின் காயம் சற்று குணம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ரோகித் சர்மா உள்ளிட்ட இந்திய வீரர்களுக்கு அமெரிக்கா செல்ல விசா கிடைத்துள்ளது. இதைத் தொடர்ந்து ரோகித் சர்மா, பயிற்சியாளர் ராகுல் டிராவிட் உள்ளிட்டோர் இன்று அமெரிக்கா சென்றுள்ளனர். முன்னதாக ரவிச்சந்திரன் அஸ்வின், ஜடேஜா, தினேஷ் கார்த்திக், சூர்யகுமார் யாதவ், குல்தீப் யாதவ் ஆகியோர் அமெரிக்கா சென்றடைந்தனர். மற்ற இந்திய வீரர்களுக்கு விசா கிடைக்க சற்று தாமதம் ஏற்பட்டது. இதன்காரணமாக அவர்கள் அமெரிக்கா செல்வதில் சிக்கல் ஏற்பட்டிருந்தது. 


 






வெஸ்ட் இண்டீஸ்- இந்தியா அணிகளுக்கு இடையேயான கடைசி 2 டி20 போட்டிகள் புளோரிடாவில் நடைபெற உள்ளது. இதற்காக வெஸ்ட் இண்டீஸ் அணியின் வீரர்கள் ஏற்கெனவே புளோரிடா சென்றடைந்தனர். இந்த இரண்டு போட்டிகளும் வரும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுகிழமை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. 


முன்னதாக நேற்று தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான தொடருக்கான அட்டவணை வெளியிடப்பட்டது.  அதன்படி இந்திய அணி முதலில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்க உள்ளது. அந்தத் தொடரின் முதல் போட்டி வரும் செப்டம்பர் மாதம் 20ஆம் தேதி மொஹாலியில் தொடங்குகிறது. இரண்டாவது டி20 போட்டி செப்டம்பர் 23ஆம் தேதியும், மூன்றாவது டி20 போட்டி செப்டம்பர் 25ஆம் தேதியும் நடைபெறுகிறது. 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண