இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் தற்போது பங்கேற்று வருகிறது. இந்தத் தொடரில் முதல் 2 போட்டிகளில் இந்திய அணி அசத்தலாக வெற்றி பெற்றுள்ளது. மூன்றாவது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது. இந்தத் தொடருக்கான கடைசி 2 டி20 போட்டிகளில் விராட் கோலி இடம்பெற்றுள்ளார். 

இந்நிலையில் அவர் 2வது டி20 போட்டியில் சரியாக ரன் அடிக்கவில்லை. மேலும் விராட் கோலி கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மோசமான ஃபார்மில் உள்ளார். இந்தச் சூழலில் விராட் கோலியின் தேர்வு தொடர்பாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் கருத்து தெரிவித்துள்ளார். 


அதில், “இந்திய அணிக்கு ஃபார்மிலுள்ள பல்வேறு வீரர்கள் இருக்கும் பட்சத்தில் எதற்காக ஒரு அனுபவ வீரர் ஃபார்மில் இல்லாத போதும் களமிறக்கின்றனர். ஒருவர் அனுபவ வீரராக இருந்தாலும் அவர் தொடர்ச்சியாக 5 போட்டிகளுக்கு மேல் சொதப்பி வரும் போது அவருக்கு எதற்காக வாய்ப்பு அளிக்கப்பட்டு வருகிறது. 

 

சர்வதேச டெஸ்ட் தரவரிசையில் இரண்டாம் இடத்திலிருக்கும் பந்துவீச்சாளருக்கு அணியில் வாய்ப்பில்லை என்றால் பேட்ஸ்மேனுக்கு அதே நிலைதான் இருக்க வேண்டும். அவர் உங்களுடைய நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக இருந்தாலும் அவருக்கும் அணியில் வாய்ப்பு இல்லாமல் போக வேண்டும். அவர் சரியாக விளையாட வில்லை என்றால் மற்ற வீரர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும். அணி தேர்விற்கு வீரர்கள் இடையே போட்டி நிலவ வேண்டும். விராட் கோலி அணியின் முக்கியமான வீரராக உள்ளார். ஆனால் தற்போது அவர் அப்படி விளையாடுவதில்லை. ஆகவே அவரும் இதுகுறித்து யோசிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். 

விராட் கோலியின் மோசமான ஃபார்ம்:

விராட் கோலியின் இந்த பின்னடைவிற்கு முக்கிய காரணம் அவருடைய பேட்டிங் ஃபார்ம் தான். விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் சதம் அடித்து 956 நாட்களாகியுள்ளது. கடைசியாக இவர் கடைசியாக 2019ஆம் ஆண்டு ஈடன் கார்டனில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சதம் அடித்திருந்தார்.  அதன்பின்னர் விளையாடிய ஒரு டெஸ்ட் போட்டியில் கூட சதம் அடிக்கவில்லை.

 

கடைசி சர்வதேச சதத்திற்கு பின்பு கோலியின் செயல்பாடு:

போட்டிகள் இன்னிங்ஸ்   ரன்கள் சராசரி  அரைசதம் டக் அவுட் சதம்
66 75 2509 36.89  24  8 0

 

அதேபோல் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளை பொருத்தவரை அதிலும் விராட் கோலி சமீபத்தில் சதம் அடிக்கவில்லை. கடைசியாக 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் தேதி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் போட்டியில் விராட் கோலி சதம் அடித்தார். அந்தப் போட்டியில் விராட் கோலி 114* ரன்கள் எடுத்தார். அதன்பின்னர் விராட் கோலி சர்வதேச ஒருநாள் போட்டிகளிலும் சதம் அடிக்கவில்லை. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண