இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட். இவர் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சதம் கடந்து அசத்தினார். அதன்பின்னர் தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 போட்டிகளில் பங்கேற்று வருகிறார். இந்தச் சூழலில் இவரை டி20 உலகக் கோப்பை தொடருக்கு வரவேற்கும் விதமாக ஐசிசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. 


அதன்படி அந்த வீடியோவில் டி20 உலகக் கோப்பை தொடர்பான காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அத்துடன் தண்ணீரிலிருந்து ரிஷப் பண்ட் உருவம் வெளியே வருவது போல் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடங்க இன்னும் 100க்கும் குறைவான நாட்களே உள்ளதால் அதற்கு ஒரு கவுண்டவுன் போல் ஐசிசி இதுபோன்ற வீடியோக்களை வெளியிட்டு வருகிறது.


 






டி20 உலகக் கோப்பை தொடர் இம்முறை அக்டோபர் 13ஆம் தேதி தொடங்கி நவம்பர் 15ஆம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளது. இதற்காக இந்த வீடியோ சிட்னி நகரின் புகழ்பெற்ற துறைமுகத்தின் மேல் எடுக்கப்பட்ட வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்திய அணி தன்னுடைய முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்த்து விளையாடுகிறது. கடந்த முறை இந்திய அணி டி20 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்தது. மேலும் இந்திய அணி முதல் சுற்றுடன் வெளியேறி ஏமாற்றம் அளித்தது. இம்முறை இந்திய அணி நன்றாக விளையாடி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறும் என்று கருதப்படுகிறது. 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண