டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணிக்காக அதிகபட்ச பார்ட்னர்ஷிப் அமைத்த இணை என்ற சாதனையைப் படைத்துள்ளனர் ஜோ ரூட் மற்றும் ஹாரி ப்ரூக். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இது நான்காவது அதிகபட்ச பார்ட்னர்ஷிப்பாக பதிவானது.


ஜோ ரூட் - ஹாரி புரூக் அதிரடி:


முல்தான் நகரில் நடைபெற்று வரும் முதல் டெஸ்டில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதில் கேப்டன் ஷான் மசூத், அப்துல்லா ஷபிக் மற்றும் சல்மான் ஆகா ஆகியோர் சதம் விளாச பாகிஸ்தான் அணி 556 ரன்கள் குவித்தது. இதனை அடுத்து தங்களது முதல் இன்னிங்ஸை தொடங்கியது இங்கிலாந்து அணி. அதன்படி, முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 823 ரன்கள் எடுத்து டிக்ளெர் செய்துள்ளது. 


1985க்கு பிறகு சாதனை:


இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய சாக் கிராலி 78 ரன்கள் எடுக்க அந்த அணியின் கேப்டன் ஒல்லி போப் டக் அவுட் ஆகி வெளியேறினார்.பின்னர் வந்த ஜோ ரூட் சிறப்பாக விளையாடினார். இதனிடையே பென் டக்கட் 84 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற ஜோ ரூட்டுடன் இணைந்தார் ஹாரி புரூக்.






இவர்களது ஜோ டி தான் தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணிக்காக அதிகபட்ச பார்ட்னர்ஷிப் அமைத்த இணை என்ற சாதனையைப் படைத்துள்ளது. அதன்படி இருவரும் இரட்டை சதம் விளாசினார்கள்.





இதனால், ஜோ ரூட் மற்றும் ஹாரி புரூக் இங்கிலாந்துக்காக ஒரே இன்னிங்ஸில் இரட்டை சதம் அடித்த இரண்டாவது ஜோடி என்ற சாதனையை படைத்துள்ளனர். இதற்கு முன்னதாக கிரேம் ஃபோலர் (201) & மைக் கேட்டிங் (207) இருவரும் 1985 இல் இந்தியாவுக்கு எதிராக சென்னையில் நடந்த போட்டியில் இப்படி ஒரு சாதனையை படைத்து இருந்தனர்.