ஆசிய கிரிக்கெட் கவுன்சில்:


ஆசிய கிரிக்கெட் கவுன்சில் வருடாந்திர பொதுக்கூட்டம் இந்தோனிஷியாவில் உள்ள பாலி தீவில் இன்று நடைபெற்றது. இதில் ஏசிசி தலைவராக ஜெய் ஷா  நீடிக்கும் தீர்மானத்தை இலங்கை கிரிக்கெட் வாரிய தலைவர் ஷம்மி சில்வா இரண்டாவது முறையாக முன்மொழிந்தார். அதனை ஏசிசி-யின் அனைத்து உறுப்பினர்களும் ஒருமனதாக ஆதரித்தனர்.


ஜெய் ஷா, வங்கதேச கிரிக்கெட் வாரியத் தலைவர் நஸ்முல் ஹாசனுக்குப் பிறகு, ஏ.சி.சி. தலைவர் பொறுப்பை கடந்த 2021 ஜனவரியில் ஏற்றார். இவரது தலைமையின் கீழ் 2022ம் ஆண்டு ஆசியக் கோப்பை டி-20 கிரிக்கெட், 2023ம் ஆண்டில் ஆசிய கோப்பை ஒருநாள் போட்டியை ஏசிசி நடத்தியது. ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் முக்கிய பணியே ஆசிய கோப்பையை நடத்துவது தான். ஜெய்ஷா தலைமையில் ஆசிய கோப்பை வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது.  முன்னதாக, 2023 ஆம் ஆண்டு ஆசிய கோப்பை தொடரின் அனைத்து போட்டிகளும் பாகிஸ்தானில் தான் நடத்தப்பட இருந்தது.


ஆனால், சில அரசியல் காரணங்களால் இந்திய அணி பாகிஸ்தான் செல்லாத காரணத்தால், பெரும்பாலான போட்டிகள் இலங்கையிலும், பாகிஸ்தானில் சில போட்டிகளும் நடைபெற்றது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஜெய் ஷா -விற்கு எதிர்ப்பு தெரிவித்த சூழலில் இலங்கை, வங்கதேசம் உள்ளிட்ட அணிகள் ஜெய் ஷாவிற்கே தங்களது ஆதரவை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.


தொடர்ச்சியாக 3 வது முறை:


இந்நிலையில், தொடர்ச்சியாக 3 வது முறையாக ஜெய் ஷா, ஏசிசி தலைவராக தேர்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ஏசிசி-ன் தொடர்ச்சியான நம்பிக்கைக்கு நான் அர்ப்பணிப்புடன் உள்ளேன். விளையாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியை உறுதி செய்வதில் நாம் உறுதியாக இருக்க வேண்டும். குறிப்பாக இன்னும் ஆரம்ப நிலையில் உள்ள நாடுகளில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். ஆசியா முழுவதும் கிரிக்கெட் விளையாட்டை வளர்க்க ஏசிசி உறுதி பூண்டுள்ளதுஎன குறிப்பிட்டுள்ளார்.


மேலும் படிக்க: Viral Video: கையில் பீர்.. உற்சாக நடனம்.. இங்கிலாந்து வீரர் டாம் ஹார்ட்லியின் வைரல் வீடியோ!


மேலும் படிக்க: Ind vs Eng 2 Test: இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்.. முறியடிக்கப்படும் சாதனை! முழு விவரம் உள்ளே!