நம்பர் ஒன் வேகப்பந்து வீச்சாளர்:


உலகின் நம்பர் ஒன் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா. இந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் மட்டும் 14 விக்கெட்டுகளை 4.17 என்ற எக்கனாமியில் எடுத்து அசத்தியவர். அதேபோல் டி20 உலகக் கோப்பையில் தொடர் நாயகன் விருதையும் வென்றவர். வரும் செப்டம்பர் 19 ஆம் தேதி தொடங்க உள்ள இரண்டு போட்டிகள் கொண்ட வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு தீவிர பயிற்சியில் இருக்கிறார் பும்ரா. இச்சூழலில் தான்  கிரிக்கெட் வீரர்களைக் கொண்ட தனது சிறந்த ஐந்து பேர் கொண்ட கால்பந்து அணியை ஜஸ்ப்ரித் பும்ரா அறிவித்திருக்கிறார்.


பும்ரா எந்த கிரிக்கெட் வீரர்களை தனது கால்பந்து அணிக்காக தேர்வு செய்தார்?


பும்ராவின் ஐந்து பேர் கொண்ட அணியில் முன்னாள் இந்திய கேப்டன் எம்.எஸ் தோனி, இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி இங்கிலாந்து அணி வீரர் ஜோஸ் பட்லர் மற்றும் ஸ்டூவர்ட் பிராட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். அதோடு அந்த அணியில் பும்ராவும் இடம் பெற்றுள்ளார்.






ரோஹித் ஷர்மாவிற்கு இடமில்லை:


பும்ராவின் ஐந்து பேர் கொண்ட கால்பந்து அணியில் இந்திய ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளின் கேப்டன் ரோஹித் ஷர்மாவிற்கு  இடம் அளிக்கவில்லை.


பும்ரா அறிவித்த டெஸ்ட் அணி:


ரோஹித் ஷர்மா (கேப்டன்) , விராட் கோலி, சுப்மன் கில், யஜஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல், சர்பராஸ் கான், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), துருவ் ஜூரெல், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா,அக்சர் படேல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், ஆகாஷ் தீப், ஜஸ்ப்ரித் பும்ரா மற்றும் யாஷ் தயாள்.


மேலும் படிக்க: Team India Vice Captain: துணை கேப்டன் பதவிக்கு மல்லுக்கட்டும் இந்திய வீரர்கள்! யார் அந்த 4 பேர்?


 


மேலும் படிக்க: Watch Video: "3 ஓவர்களுக்குள் அவுட்டாக்குறோம்" : குல்தீப் யாதவுக்கு சவால் விட்ட ரிஷப் பண்ட்! அடுத்து நடந்தது என்ன?