இந்தியா - இலங்கை:


இந்தியா மற்றும் இலங்கை அணி 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதில் டி20 அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவும் ஒரு நாள் அணியின் கேப்டனாக ரோஹித் ஷர்மாவும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி இந்த தொடரில் விளையாட உள்ள இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா இடம் பெறவில்லை. இந் நிலையில் ஜஸ்ப்ரித் பும்ரா அளித்துள்ள பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 


அதில், "அணியிடம் சென்று நீங்கள் என்னை கேப்டனாக்குங்கள் என்று நான் சொல்ல முடியாது. பேட்ஸ்மேன்களை அவுட்டாக்குவதால் பவுலர்கள் புத்திசாலித்தனமானவர்கள் என்று நான் கருதுகிறேன். இப்போது பேட்டுகள் வலுவாகியுள்ளது. மைதானங்கள் சிறிதாகியுள்ளது. அவற்றுக்கு எதிராகவும் நாங்கள் போராட வேண்டியுள்ளது.


பந்தை அதிகமாக ஸ்விங் செய்வது பற்றிய செய்தி அல்லது டெக்னாலஜி வந்ததாக எனக்கு நினைவில் இல்லை. மக்கள் சிக்சர்கள் அடிப்பதையே விரும்புகின்றனர். அப்படி பவுலர்கள் மிகவும் கடினமான வேலை செய்கின்றனர். அவர்கள் பேட் அல்லது ஃபிளாட்டான பிட்ச்சுக்கு பின்னே ஒளிந்து கொள்வதில்லை.


ரஜினையை சந்தித்த தருணம்:






அந்த கடினமான வேலையில் பவுலர்கள் நிறைய சவால்களை சந்திக்கின்றனர். இவற்றையெல்லாம் தாண்டி சாதித்து வருவது பவுலர்களை தைரியமாக்குகிறது" என்று கூறினார். அப்போது அவரிடம், அம்பானி வீட்டு திருமணத்தில் உங்களுக்கு பிடித்த நட்சத்திரம் யார் என்ற கேள்வி எழுப்பப்பட்டது.


அதற்கு பதிலளித்த ஜஸ்ப்ரித் பும்ரா, "அம்பானி வீட்டு திருமணத்தில் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்தது மிகவும் பிடித்த தருணம். நடிகர் ரஜினிகாந்தை சந்திக்க வேண்டும் என்ற ஆசை எப்போதும் எனக்கு இருந்தது. அவரை நேரில் சந்தித்தது எனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக இருந்தது" என்று பும்ரா கூறியுள்ளார்.