2022 ஆம் ஆண்டுக்கான உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியிலிருந்து, ஜஸ்பிரித் பும்ரா விலகுவதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.
நட்சத்திர வீரர்:
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான பும்ரா, இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்து வருகிறார். காயத்தால் அவதிப்பட்டு வந்த பும்ரா ஆசிய கோப்பைத் தொடரில் ஆட முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, காயத்தால் இருந்து மீண்ட பும்ரா ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணிக்கு திரும்பி சிறப்பாக பந்து வீசினார்.
காயம்:
இதையடுத்து, தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரில் பும்ரா இடம்பெற்றிருந்த நிலையில், காயம் காரணமாக பும்ரா களமிறங்கவில்லை. இந்த நிலையில், பும்ராவை பரிசோதித்த மருத்துவர்கள் அடுத்து வரும் போட்டியில் அவர் ஆட முடியாத சூழல் ஏற்பட்டிருப்பதை உறுதி செய்தனர். இந்த நிலையில், தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரில் இருந்து விலகுவதாக தெரிவிக்கப்பட்டது.
விலகல்
உலககோப்பை டி20 தொடருக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், பும்ரா காயத்தால் மீளாமல் இருந்தார். பும்ரா காயத்தால் உலககோப்பைத் தொடரில் விளையாடுவாரா? இல்லையா? எனும் சந்தேகம் இருந்து வந்தது. இந்நிலையில், தற்போது டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியிலிருந்து பும்ரா விலகுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பும்ரா இடத்தில் யார்?
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியிலிருந்து பும்ரா விலகியிருப்பது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. இது கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பும்ராவின் தோல்வி கடந்த ஆண்டு தங்கள் செயல்திறனை மேம்படுத்துவதற்கான இந்தியாவின் நம்பிக்கைக்கு ஒரு பெரிய அடியாகும். ஆண்கள்
டி20 போட்டிகளில் 60 போட்டிகளில் 70 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்தியாவின் மூன்றாவது அதிக விக்கெட் வீழ்த்தியவர் பும்ரா. குறிப்பாக யார்க்கர் பந்து வீசும் திறமை மற்றும் துல்லியம், குறிப்பாக, டெத் ஓவர்களை சிறப்பாக கையாளும் திறமை கொண்ட பும்ரா இல்லாதது இந்தியாவுக்கு பெரும் இழப்பாகும்.
அவருக்கு பதிலாக இந்திய அணியில் முகமது ஷமி இடம்பெறலாம் என்ற தகவல்களும் கிரிக்கெட் வட்டாரத்தில் உலவுகின்றன.
இந்நிலையில், ஜஸ்பிரித் பும்ராவுக்கான மாற்று வீரரை பிசிசிஐ விரைவில் நியமிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.