ஜஸ்ப்ரித் பும்ரா இன்று (ஏப்ரல் 26) தனக்கு சொந்தமாக புதிய யூடியூப் சேனலை தொடங்கி,”எனது பயணத்தில் இணையுங்கள்”என்று கேட்டுக்கொண்டுள்ளார்.


வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா:


இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா. கடந்த 2016-ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்ற ஒரு நாள் போட்டியின் மூலம் சர்வதேச கிரிக்கெட் உலகில் அறிமுகமானவர். அதேபோல், டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக கடந்த 2018 ஆம் ஆண்டு அறிமுகமானார்.


அந்தவகையில், இதுவரை 36  டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள பும்ரா 159 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருக்கிறார். அதேபோல், 89 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 149 விக்கெட்டுகள் எடுத்து இருக்கிறார். டி20 போட்டிகளை பொறுத்தவரை 62 போட்டிகள் விளையாடி 74 விக்கெட்களை வீழ்த்தியிருக்கிறார் பும்ரா.


இந்நிலையில் கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் ஐ.பி.எல் சீசன்களிலும் விளையாடி வருகிறார். அந்தவகையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக அறிமுகமான பும்ரா மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இதுவரை 128 ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடி 158 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருக்கிறார். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 847 புள்ளிகளுடன் ஐசிசி புள்ளிப்பட்டியலில் 3 வது இடத்திலும், ஒருநாள் ஐசிசி பந்துவீச்சில் 5 வது இடத்திலும் இருக்கிறார். இப்படி பந்துவீச்சில் கலக்கி வரும் பும்ரா சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருப்பாவர்.


புதிய யூடியூப் சேனல்:


இச்சூழலில் தான் இன்று(ஏப்ரல் 26) ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ் சொல்லி இருக்கிறார். அதாவது ஏற்கனவே முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்கள் தங்களுக்கு சொந்தமாக யூடியூப் சேனல் நடத்தி வரும் சூழலில் பும்ராவும் தற்போது புதிய யூடியூப் சேனல் தொடங்கி உள்ளார்.


இது தொடர்பான தகவலை அவருடைய அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அந்த பதிவில், “அனைவருக்கும் வணக்கம், நான் இங்கு வந்து எனது சொந்த யூடியூப் சேனலை அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளதை அறிவிக்க விரும்புகிறேன்.





நீங்கள் இதுவரை பார்த்திராத விசயங்கள் மற்றும் என் வாழ்க்கையில் ஒரு கண்ணோட்டம் உள்ளது. எனவே கீழே உள்ள இணைப்பைக் கிளிக் செய்து என்னுடன் எனது பயணத்தில் இணையுங்கள். அங்கே பார்க்கலாம்.” என்று கூறியுள்ளார். இவரது புதிய யூடியூப் சேனல் வெற்றி பெற  ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.