இந்தியன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக்:
இந்தியன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக் - T10 என்பது இந்தியாவில் உள்ள சிறந்த உள்ளூர் கிரிக்கெட் வீரர்களைக் கொண்டு நடத்த திட்டமிடப்பட்டுள்ள ஒரு கிரிக்கெட் லீக் ஆகும். இந்த லீக்கில் டென்னிஸ் பந்து பயன்படுத்தப்படவுள்ளது. இது வீரர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த ஒரு விரிவான தளத்தை ஏற்படுத்த இந்த லீக் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த லீக் போட்டியானது ஒவ்வொரு சுற்றுகளாக நடத்தப்பட்டு மிகவும் திறமையான வீரர்களை அடையாளம் காட்டவே இந்த லீக் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியன் ஸ்ட்ரீட் பிரிமியர் லீக் டி10 கிரிக்கெட் மற்றும் மைதானத்தில் நடக்கும் ஸ்டிச் பால் கிரிக்கெட்டிற்கும் இடையே உள்ள இடைவெளியைக் குறைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த ஆண்டு சென்னை அணியினை நடிகர் சூர்யா வாங்கினார். அதன்படி அந்த அணிக்கு 'சென்னை சிங்கம்ஸ்' என்ற பெயரை வைத்தார்.
இந்த போட்டிகள் மார்ச் 6 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை மும்பையில் நடைபெற உள்ளது. இந்நிலையில் சென்னை சிங்கம்ஸ் அணியின் வீரர்களை நடிகர் சூர்ய அறிமுகபடுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
வீரர்கள் விவரம் பின்வருமாறு:
- சாகர் அலி - பேட்ஸ்மேன்
- சஞ்சய் கனோஜ்ஜியா - பேட்ஸ்மேன் – வலது கை சுழற்பந்து வீச்சாளர்
- ஃபர்மான் கான் - பந்து வீச்சாளர்
- ஃபர்ஹாத் அகமது - பந்து வீச்சாளர்
- ஆர். தவித் குமார் – ஆல் ரவுண்டர்
- வெங்கடாசலபதி விக்னேஷ் – ஆல் ரவுண்டர்
- திலீப் பின்ஜ்வா – ஆல்ரவுண்டர்
- பங்கஜ் படேல் – பந்து வீச்சாளர்
- சுமீத் தெகலே – பேட்ஸ்மேன்
- பப்லு பாட்டீல் – ஆல் ரவுண்டர்
- கேதன் மத்ரே – பேட்ஸ்மேன்
- அனிகேத் சனாப் – பந்து வீச்சாளர்
- ராஜ்தீப் ஜடேஜா – பந்து வீச்சாளர்
- விஸ்வநாத் ஜாதவ் - ஆல்ரவுண்டர்
- வேதாந்த் மாயேகர் -ஆல் ரவுண்டர்
- ஹரிஷ் பர்மர் - வலது கை - ஆல் ரவுண்டர்
மேலும் படிக்க: IND vs ENG: 10 விக்கெட்டுகளையும் அள்ளிய இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள்! இங்கிலாந்துக்கு எதிராக மீண்டும் சாதனை!
மேலும் படிக்க: Dhruv Jurel: கார்கில் போர் வீரரான தந்தைக்கு பிக் சல்யூட் - துருவ் ஜூரல் பின்னணி தெரியுமா?