ஒருநாள் கிரிக்கெட்டில் ஷிகர் தவானின் காலம் முடியப்போவது ஒன்றும் இரகசியமல்ல. இந்திய கிரிக்கெட்டின் 'கப்பார்' டி20களில் இருந்து ஒதுக்கப்பட்ட பிறகு அவர் விளையாடும் ஒரே சர்வதேச ஃபார்மட் இது மட்டும்தான். அதிலும் பின்னால் பல இளைஞர்கள் வரிசை கட்டி நிற்கின்றனர் என்ற நிலையில், அவரும் ரன் குவிக்க தவறி வரும் நிலையில், இந்திய அணியின் ஓப்பனிங் ஸ்பாட் காலியாக போகிறது என்பது தவிர்க்கமுடியாத விஷயம். அதுவும் 2023 ஆம் ஆண்டு சொந்த மண்ணில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கோப்பையின் போது இந்திய அணிக்காக ஓபனிங் செய்ய சிறந்த வீரரையே அணி விரும்பும். அந்த போட்டியில் உள்ள முதல் 3 போட்டியாளர்களின் கடைசி 5 ODI இன்னிங்ஸ்களை இங்கே பார்க்கலாம்.



தவானின் கடைசி 5 ஒருநாள் இன்னிங்ஸ்


3வது ODI Vs BAN: 3(8)


2வது ODI Vs BAN: 8(10)


1st ODI Vs BAN: 7(17) 


3வது ODI Vs NZL: 28(45) 


2வது ODI Vs NZL: 3(10)


ஷிகர் தவான் கடைசி ஐந்து ஒருநாள் போட்டிகளில் மிகவும் மோசமாக ரன் குவித்துள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 77 பந்துகளில் 72 ரன்கள் எடுத்த பிறகு, தவான் ஒரு போட்டியில் கூட சிறப்பாக செயல்படவில்லை. அவர் 30 ரன்களை கூட தாண்டவில்லை என்பது கவலை அளிக்கும் விஷயம் தான். அவரது ஸ்ட்ரைக் ரேட்டும் மற்ற இருவரையும் விட குறைவாக உள்ளது. கடைசி 5 இன்னிங்ஸில் நியூசிலாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் 28 ரன் எடுத்ததே அவரது அதிகபட்ச ஸ்கோராக உள்ளது. 



இஷான் கிஷானின் கடைசி 5 ஒருநாள் இன்னிங்ஸ்


3வது ODI Vs BAN: 210(131)


3வது ODI Vs SA: 10(18)


2வது ODI Vs SA: 93(84)


1st ODI Vs SA: 20(37)


3வது ODI Vs ZIM: 50(61)


மறுபுறம் இஷான் கிஷன், ஒருநாள் போட்டிகளில் அபாரமான பார்மில் உள்ளார். கடைசி ஐந்து ஒருநாள் இன்னிங்ஸ்களில், இஷான் கிஷன் ஒரு இரட்டை சதம், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 93 மற்றும் ஜிம்பாப்வேக்கு எதிராக அரைசதம் அடித்துள்ளார் அடித்து படு பயங்கரமான ஃபார்மில் உள்ளார். மேலும் அவருக்குச் சாதகமாகச் செயல்படக்கூடிய இரண்டு விஷயங்கள், அவர் இடது கை ஆட்டக்காரராக இருப்பதும், 100க்கு மேல் ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடும் திறமை கொண்டுள்ளதும் ஆகும்.



சுப்மன் கில்லின் கடைசி 5 ஒருநாள் இன்னிங்ஸ்


3வது ODI Vs NZ: 13(22)


2வது ODI Vs NZ: 45(42)


1வது ODI Vs NZ: 50(65)


3வது ODI Vs SA: 49(57)


2வது ODI Vs SA: 28(26)


ஷுப்மான் கில், ஒரு நல்ல ஃபார்மை காண்பித்துள்ளார். ஆனால், ஷிகர் தவானைப் போலவே, ஸ்ட்ரைக் ரேட் அவருக்கு ஒரு பெரிய பிரச்சினையாக உள்ளது. கடைசி 5 ODI இன்னிங்ஸ்களில், கில் ஒரே ஒரு அரை சதம் அடித்திருந்தாலும் மற்ற இரு முறை 40 ரன்களை தாண்டி அடித்துள்ளார். 


தொடர்புடைய செய்திகள்: இந்த பட்டியலில் கோலியும் இல்லை..? தோனியும் இல்லை...? கூகுளில் அதிகம் தேடப்பட்ட வீரர் இவர்தான்!


தேர்வுக்குழுவுக்கு தலைவலி


தலைமை தேர்வுக் குழு விரைவான முடிவுகளை எடுக்க வேண்டிய நிலையில் உள்ளது. ஷிகர் தவான் பாரம்பரியத்தை தொடர வேண்டுமா என்பதை அவர்கள் முடிவு செய்ய வேண்டும், இது உலகக் கோப்பைக்கு பெரும் தலைவலியாகவும் வரலாம். கடினமான முடிவாக இருந்தாலும் அவரை டிராப் செய்வதில் இந்திய அணிக்கு லாபம் இருக்கும் எனில் செய்துதான் ஆக வேண்டும். தவானை டிராப் செய்து, இஷான் கிஷன் அல்லது கில் இருவரில் ஒருவருக்கு வாய்ப்பு கொடுப்பது ஒரு சிறந்த வழியாக இருக்கலாம். அதிலும் இஷான் கிஷனை இன்னும் ஒருசில போட்டிகள் சோதித்து பார்த்துவிட்டு கன்சிஸ்டன்சி சிறப்பாக இருக்கும் பட்சத்தில் அவரையே இறுதி செய்யும் முடிவில் தேர்வுக்குழுவும் கேப்டன் ரோகித் ஷர்மாவும் இருப்பதாக தெரிகிறது. இந்நிலையில், ரிஷப் பந்த் விடுப்பில் உள்ளார் என்பதையும் மனதில் கொள்ளவும்.