ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் தக்கவைப்பு சமீபத்தில் நடந்து முடிந்தது. அதனை அடுத்து, ஐபிஎல் தொடருக்கான வீரர்களின் ஏலம் பெங்களூருவில் வரும் பிப்ரவரி மாதத்தில் நடைபெற வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகின. இந்நிலையில், வரும் பிப்ரவரி மாதம் 12, 13-ம் தேதிகளில் இந்த மெகா ஏலம் நடைபெறும் என்பதை ஐபிஎல் தலைவர் ப்ரிஜேஷ் பட்டேல் உறுதிப்படுத்தியுள்ளார்.
மேலும், புதிதாக சேர்க்கப்பட்டுள்ள லக்னோ, அகமதாபாத் ஆகிய இரண்டு அணிகள் தேர்ந்தெடுக்க வேண்டிய அணி வீரர்களின் பட்டியலை சமர்ப்பிக்க, இரண்டு வார காலம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே கிடைத்த தகவலின்படி, அகமதாபாத் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா தேர்வு செய்யப்படலாம் என தெரிகிறது. மும்பை இந்தியன்ஸ் அணியின் முக்கிய ஆல்-ரவுண்டராக விளையாடி வந்த ஹர்திக், அகமதாபாத்தின் கேப்டனாக தேர்வு செய்யப்படலாம் என தெரிகிறது. அதே போல, மற்றொரு புதிய அணியான லக்னோ அணியின் கேப்டனாக கே.எல் ராகுலை தேர்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
ஐபிஎல் தொடருக்கான ஸ்பான்சரைப் பொருத்தவரை, 2018 முதல் 2022-ம் ஆண்டு வரையிலான ஐபிஎல் தொடர்களின் ஸ்பான்சராக விவோ ஒப்பந்தம் செய்யப்பட்டது. 2200 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட விவோ, இந்தியா - சீனா இடையேயான கல்வான் பல்லத்தாக்கு விவகாரம் காரணமாக 2020 ஐபிஎல் தொடரின்போது விலக்கி வைக்கப்பட்டது. அப்போது ட்ரீம் 11 நிறுவனம் ஸ்பான்சராக இருந்தது. இந்நிலையில், இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் ஸ்பான்சராக டாடா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக ஐபிஎல் தலைவர் ப்ரிஜேஷ் பட்டேல் உறுதி செய்திருக்கிறார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்