தோனி! இந்த பெயரை கேட்டாலே அது டிரெண்ட் செய்தியாகத்தான் இருக்கும். கிரிக்கெட் விளையாட்டோ, கிரிக்கெட்டுக்கு வெளியேவோ தோனியைப் பற்றி எதுவாக இருந்தாலும் அது அவரது ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தும். அந்த வகையில், சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் வைரலாகி வரும் ’அர்பன் டிக்‌ஷ்னரி’ என்ற டிரெண்டில் தோனியும் இப்போது இணைந்திருக்கிறார்.


தோனி, சமூக வலைதளங்களில் அவ்வளவு ஆக்டீவாக இல்லையென்றாலும் அவரது மனைவி சாக்‌ஷி மிகவும் ஆக்டீவானவர். அவ்வப்போது தோனியைப் பற்றி இன்ஸ்டாகிராமில் அவர் பகிரும் புகைப்படங்கள் எல்லாம் எப்போதுமே வைரல் ரகம்தான்.






மேலும் படிக்க: Bigg Boss 5 Tamil: கமலுக்கு பதில் இவர் ; பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ரெடியான ரம்யா கிருஷ்ணன்


அந்த வரிசையில், ‘அர்பன் டிக்‌ஷ்னரி’ பற்றிய அவரது ஸ்டோரி இப்போது வைரலாகி வருகின்றது. இந்த டிரெண்டில், ஒருவரது பெயருக்கான பொருளை அந்த டிக்‌ஷ்னரியிடம் கேட்டால் அது சுவாரஸ்யமான விளக்கத்தை தருகின்றது. இதை நிறைய பேர் பகிர்ந்து வருகின்றனர்.


இந்நிலையில், சாக்‌ஷி தோனி, ‘மகேந்திரா’ என்ற பெயருக்கு விளக்கம் கேட்டிருக்கிறார். அதற்கு பதிலளித்திருக்கும் அர்பன் டிக்‌ஷ்னரி,  “இந்த பெயர் கொண்டவர் மிகவும் திறமையானவர். கோபப்படுவார்கள். ஆனால், மிகவும் நல்ல மனிதர். அன்பானவர். பெண்களுக்கு மிகவும் பிடித்தவர்” என அடுக்கடுக்காய் சில பாயிண்டுகளை சொல்லி இருக்கிறது. இதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்த சாக்‌ஷி, தோனியை டேக் செய்திருந்தார்.



சாக்‌ஷியின் இந்த பதிவுக்கு தோனி ரசிகர்கள், ஹார்ட்ஸ், ஹாஹா ரியாக்‌ஷன்களை அனுப்பி வருகின்றனர். சாக்‌ஷி தோனியை இன்ஸ்டாகிராமில் 4.5 மில்லியன் பேர் ஃபாலோ செய்கின்றனர். தோனியை 36.6 மில்லியன் பேர் ஃபாலோ செய்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


 


மேலும் படிக்க: Ind vs NZ, 1st Test Day 2: லாதம், யங் நிதானத்தால் நியூசி., 129/0 ; விக்கெட் எடுக்க முடியாத ஏமாற்றத்தில் இந்தியா


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண