இந்திய ஏ கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்த நாட்டின் ஏ கிரிக்கெட் அணியுடன் டெஸ்டில் ஆடி வருகிறது. இந்த போட்டியில் தென்னாப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்தது. அப்போது, அந்த அணி 6 விக்கெட் இழப்பிற்கு 459 ரன்களை குவித்து ஆடிக்கொண்டிருந்தது.





அப்போது, தென்னாப்பிரிக்க விக்கெட் கீப்பர் க்யூஷில் 56 ரன்களுடன் ஆடிக்கொண்டிருந்தார். அவருக்கு பந்துவீசிய ராகுல் சாஹர் எல்.பி.டபுள்யூ கேட்டு அப்பீல் செய்தார். ஆனால், நடுவர் அவுட் தர மறுத்துவிட்டார். இதனால் கோபமடைந்த ராகுல்சாஹர் தனது தலையில் மாட்டியிருந்த கண்ணாடியை தரையில் ஆத்திரத்தில் வீசினார். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.






இந்த போட்டியில் தென்னாப்பிரிக்க முதல் இன்னிங்சில் 509 ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது. இந்தியா தற்போது தனது முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுகளை இழந்து 308 ரன்களுடன் ஆடி வருகிறது. இந்திய அணியில் கேப்டன் பிரியங்க் பஞ்சால் 96 ரன்களிலும், பிரித்விஷா 48 ரன்களிலும், அபிமன்யு ஈஸ்வரன் 103 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பாபா அபரஜித் 19 ரன்களுடனும், உபேந்திர யாதவ் 5 ரன்களுடனும் ஆடி வருகின்றனர். ராகுல் சாஹர் இந்த போட்டியில் 28.3 ஓவர்களில் 125 ரன்களை விட்டுக்கொடுத்து 1 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.




ராகுல் சாஹர் ஐ.பி.எல். போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆடிவருகிறார். அவர் இதுவரை 42 ஐ.பி.எல். போட்டிகளில் ஆடி 43 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். சிறந்த பந்துவீச்சாக 27 ரன்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இந்திய அணிக்காக 1 ஒருநாள் போட்டியில் ஆடி 3 விக்கெட்டுகளையும், 6 டி20 போட்டிகளில் ஆடி 7 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். சமீபத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற உலககோப்பை டி20 தொடருக்கான இந்திய அணியிலும் ராகுல் சாஹர் இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  


மேலும் படிக்க : முதல் போட்டியிலேயே சதம்.. கங்குலி, ஷேவாக், ரோஹித் ஷர்மா பட்டியலில் இணைந்த ஸ்ரேயாஸ்.. லிஸ்ட் இதோ


மேலும் படிக்க : IND vs NZ 1st Test: 345 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது இந்தியா...! முதல் இன்னிங்சை தொடங்கியது நியூசிலாந்து...!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண