அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் முதல் இரண்டு புது அணிகள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளன. இந்த இரு அணிகளுக்கான உரிமையாளர்கள் மற்றும் அவர்கள் அணியை ஏலத்தில் எடுத்த தொகைகள் வெளியாகின. அதன்படி ஆர்பிஎஸ்ஜி நிறுவனம் 7,090 கோடி ரூபாய்க்கு லக்னோ அணியையும், சிவிசி நிறுவனம் 5625 கோடி ரூபாய்க்கு அகமதாபாத் அணியையும் எடுத்துள்ளனர். இதன் மூலம் 2022ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் 10 அணிகள் விளையாட உள்ளன.



இந்நிலையில் 2022ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கு முன்பாக வீரர்கள் தக்கவைப்பது மற்றும் வீரர்கள் ஏலம் தொடர்பான தகவல்கள் வெளியானது. அதன்படி, 2022ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கு முன்பாக வீரர்களின் ஏலம் நடைபெறும். அந்த ஏலத்தில் ஒவ்வொரு அணியும் 90 கோடி ரூபாய் வரை செலவு செய்யலாம் என்றும், ற்கெனவே இருக்கும் 8 அணிகளும் தலா 4 வீரர்களை தக்கவைத்து கொள்ளலாம். அதாவது 3 இந்திய வீரர்கள் ஒரு வெளிநாட்டு வீரர் அல்லது 2 வெளிநாட்டு வீரர்கள் மற்றும் 2 இந்திய வீரர்கள் என தக்கவைத்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. 


எனினும் இந்த விதிகள் தற்போது வரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்ற தகவல் வெளியாகி வந்தநிலையில், டெல்லி கேபிட்டல்ஸ் அணியிலிருந்து நானும், ஷ்ரேயாஸ் ஐயரும் ஒதுக்கப்படுவதாக அஸ்வின் பகீர் குற்றசாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார். இதுகுறித்து அஸ்வின் தனது யூ டியூப் பக்கத்தில் தெரிவிக்கையில், 


டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு கேப்டனாக இருந்த ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் என்னையும் தக்க வைக்கவில்லை. அப்படி ஏதாவது முடிவு செய்திருந்தால் இந்நேரம் எங்களுக்கு தெரிந்திருக்கும். சீனியர் வீரர்கள் முற்றிலும் ஒதுக்கப்பட்டு, இளம் வீரர்களை மட்டுமே எடுக்க முடிவு செய்து வருகிறது. 



டெல்லி அணியில் வேகப் பந்துவீச்சாளர் ஆன்ரிக் நோர்க்கியா மற்றும் தற்போது அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் ரிஷப் பண்ட் மற்றும் பிரித்திவி ஷா போன்ற வீரர்களை மட்டுமே தக்கவைக்க முடிவு செய்துள்ளனர். ஏற்கனவே 3 வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் யார் அந்த 4 வது நபர் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. 


ஐபிஎல் வரலாற்றில் டெல்லி அணி இதுவரை ஒருமுறை கூட கோப்பையை வெல்லவில்லை. கடந்த 2020 ஐபிஎல் தொடரில் இறுதிப்போட்டி வரையும், கடந்த சீசனில் பிளே ஆப் சுற்று வரை டெல்லி அணி முன்னேறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


 


பேஸ்புக் பக்கத்தில் தொடர


 


ட்விட்டர் பக்கத்தில் தொடர


 


யூடியூபில் வீடியோக்களை காண