இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. இத்தொடரின்  முதல் போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. இதைத் தொடர்ந்து இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று அகமதாபாத் மைதானத்தில் நடைபெற உள்ளது. 


இந்நிலையில் இன்றைய போட்டியில் வெற்றி பெறும் பட்சத்தில் இந்திய அணி தொடரை கைப்பற்றும். அத்துடன் இந்திய மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக தொடர்ச்சியாக 7ஆவது முறையாக இந்திய அணி தொடரை வென்று அசத்தும். கடைசியாக இந்திய மண்ணில்  வெஸ்ட் இண்டீஸ் அணி 2002ஆம் ஆண்டு நடைபெற்ற தொடரை 4-3 என்ற கணக்கில் வென்றது. அதன்பின்னர் 19 ஆண்டுகளாக நடைபெற்றுள்ள 6 தொடர்களையும் இந்திய அணியே வென்றுள்ளது. 


ALSO READ | Rasi Palan Today, Jan 9: பணம் புரளும் யோகத்தில் கும்பம்... துள்ளி விளையாடும் மீனம்... இன்றைய ராசிபலன் !


இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ் முந்தைய 8 தொடர்கள்:


1994-95: 4-1  இந்தியா வெற்றி


2002: 4-3  வெஸ்ட் இண்ட்ஸ் வெற்றி


2006–07: 3-1  இந்தியா வெற்றி


20011-12: 4-1  இந்தியா வெற்றி


2013-14: 2-1  இந்தியா வெற்றி


2014-15: 2-1  இந்தியா வெற்றி


2018-19: 3-1  இந்தியா வெற்றி


2019-20: 2-1 இந்தியா வெற்றி 


 


வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக சொந்த மண்ணில் இந்திய அணி இதுவரை 7 தொடர்களை வென்றுள்ளது. 1994-95ஆம் ஆண்டில் இந்திய வெஸ்ட் இண்டீஸ் அணியை 4-1 என்ற கணக்கில் முதல் முறையாக வீழ்த்தியது. அதன்பின்னர் 2002 தொடரிலும் மட்டும் இந்தியா தோல்வி அடைந்தது. அதன்பின்னர் 6 முறையும் தொடர்ந்து இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. இன்றைய போட்டியில் வெற்றி பெறும் பட்சத்தில் தொடர்ச்சியாக 7ஆவது முறையாக இந்திய அணி தொடரை வென்று அசத்தும். 


 






இரண்டாவது ஒருநாள் போட்டியில் மீண்டும் ஷிகர் தவான் மற்றும் கே.எல்.ராகுல் இந்திய அணியில் இடம்பெற உள்ளனர். இதனால் இஷான் கிஷன் மற்றும் தீபக் ஹூடா ஆகிய இருவரும் இந்திய அணியில் இடம்பெற வாய்ப்பு குறைவு என்று கருதப்படுகிறது. இவர்கள் தவிர வேறு மாற்றம் எதுவும் இருக்காது என்று கூறப்படுகிறது. 



மேலும் படிக்க:5வது வீரர் என்றால் என்ன? பேட்டிங் ஆர்டர் பிரச்சனையே இல்லை: சூர்யகுமார் யாதவ்