தென்னாப்பிரிக்கா-இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி செஞ்சுரியன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 272 ரன்கள் எடுத்திருந்தது. இரண்டாவது நாளான நேற்று மழை காரணமாக முழு நாள் ஆட்டமும் தடைப்பட்டது. 

இந்நிலையில் மூன்றாவது நாளான இன்று இந்திய அணி முதல் செஷனில் மழமழவென விக்கெட்களை இழந்தது. 272/3 என இருந்த இந்திய அணி 327 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. 54 ரன்கள் சேர்ப்பதற்குள் இந்திய அணி 7 விக்கெட்களை இழந்து ஏமாற்றியது. இதைத்தொடர்ந்து முதல் இன்னிங்ஸை தொடர்ந்த தென்னாப்பிரிக்க அணியில் கேப்டன் டின் எல்கர் பும்ரா வீசிய முதல் ஓவரில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். அதன்பின்னர் இந்திய வீரர் முகமது ஷமி 3 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். அவருடன் சேர்ந்து ஷர்துல் தாகூரும் தன் பங்கிற்கு ஒரு விக்கெட் வீழ்த்தினார். இதனால் தென்னாப்பிரிக்க அணி தேநீர் இடைவேளையின் போது 5 விக்கெட் இழந்திருந்தது.

தேநீர் இடைவேளைக்கு பிறகு இந்திய வேகப்பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தவித்தது. இறுதியில் முகமது ஷமியின் வேகத்தில் தென்னாப்பிரிக்க அணி 197 ரன்களுக்கு சுருண்டது. முகமது ஷமி 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். பும்ரா மற்றும் ஷர்துல் தாகூர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இந்தப் போட்டியில் 5ஆவது விக்கெட் வீழ்த்தியதன் மூலம் முகமது ஷமி டெஸ்ட் கிரிக்கெட்டில் தன்னுடைய 200ஆவது விக்கெட்டை வீழ்த்தியுள்ளார். மேலும் அதிவேகமாக 200 டெஸ்ட் விக்கெட் வீழ்த்திய வேகபந்துவீச்சாளர்கள் பட்டியலில் 3ஆவது இடத்தையும் பிடித்துள்ளார். 

அதிவேகமாக 200 டெஸ்ட் விக்கெட் வீழ்த்திய இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள்:

வீரர்கள்  டெஸ்ட் போட்டிகள்
கபில்தேவ் 50
ஜவகல் ஶ்ரீனாத் 54
முகமது ஷமி 55
ஜாகீர் கான் 63
இஷாந்த் சர்மா 63

எப்போதும் இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட் எடுத்து அசத்தும் ஷமி அசத்துவர். ஏனென்றால் இதுவரை அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 7 முறை ஒரே இன்னிங்ஸில் 5 விக்கெட் வீழ்த்தியுளார். அதில்  தற்போது தான் இரண்டாவது முறையாக முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட் வீழ்த்தியுள்ளார். இதற்கு முன்பாக 2015ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் மெல்பேர்னில் நடைபெற்ற போட்டியில் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட் வீழ்த்தியிருந்தார். 

அதேபோல் தென்னாப்பிரிக்க தொடரில் இரண்டாவது முறையாக ஷமி 5 விக்கெட் வீழ்த்தியுள்ளார். ஏற்கெனவே 2018-ஆம் ஆண்டு நடைபெற்ற தென்னாப்பிரிக்கா-இந்தியா தொடரில் மூன்றாவது டெஸ்ட் போட்டி ஜோகானிஸ்பெர்கில் நடைபெற்றது. அந்தப் போட்டியை இந்திய அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அப்போட்டியில் சிறப்பாக பந்துவீசிய இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி இரண்டாவது இன்னிங்ஸில் 28 ரன்கள் விட்டு கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். அத்துடன் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார்.

மேலும் படிக்க: வாவ்..தோனியின் சாதனையை முறியடித்து புதிய சாதனை படைத்த ரிஷப் பண்ட் !