இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்துள்ள ஆஸ்திரேலிய அணி பார்டர் - கவாஸ்கர் டிராபியை 2-1 என்ற கணக்கில் இழந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற கேப்டன் ஹர்திக் பாண்ட்யா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். 


இந்திய அணியில் யார்? யார்?


இரு அணிகளும் மோதும் மூன்று ஒருநாள் போட்டி கொண்ட தொடர் மார்ச் 17-ந் தேதி தொடங்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், முதல் போட்டி இன்று தொடங்கியுள்ளது. மனைவியின் சகோதரர் திருமணத்தில் பங்கேற்க இருப்பதால் அவர் இன்றைய போட்டியில் பங்கேற்கவில்லை.


இதனால், ஹர்திக்பாண்ட்யா தலைமையில் களமிறங்கியுள்ள இந்திய அணியில் தொடக்க வீரர்களாக சுப்மன்கில், இஷான்கிஷான் களமிறங்க உள்ளனர். மிடில் ஆர்டரில் விராட்கோலி, சூர்யகுமார் யாதவ், கே.எல்.ராகுல் உள்ளனர். விக்கெட் கீப்பராக கே.எல்.ராகுல் களமிறங்குகிறார். ஆல்ரவுண்டர்களாக ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், கேப்டன் ஹர்திக்பாண்ட்யா களமிறங்கியுள்ளனர். முகமது சிராஜ் மற்றும் முகமது ஷமி வேகப்பந்துவீச்சில் அசத்த உள்ளனர்.


சேசிங் ஏன்?


பாட் கம்மின்ஸ் இல்லாததால் ஸ்டீவ் ஸ்மித் தலைமையில் ட்ராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், லபுசேனே பேட்டிங்கில் வலுவாக உள்ளனர். அவர்களுடன் இந்தியாவில் ஆடிய அனுபவமிக்க ஆல்ரவுண்டர் மேக்ஸ்வெல், இளம் அதிரடி வீரர் கிரீனும் கடைசி கட்ட பேட்டிங்கில் அசத்துவார்கள் என்று நம்பலாம். பந்துவீச்சில் ஸ்டோய்னிஸ், சீன் அப்பாட், ஸ்டார்க், ஜம்பா உள்ளனர். இவர்களில் ஸ்டோய்னிஸ் பேட்டிங்கில் மிரட்டும் திறமை கொண்டவர்.


போட்டி நடக்கும் மும்பை வான்கடே மைதானம் பேட்டிங்கிற்கு நல்ல சாதகமாக இருக்கும் என்பதால், பேட்டிங்கில் இரு அணிகளும் வெளுத்து வாங்கும் என்று எதிர்பார்க்கலாம். முதலில் பேட் செய்யும் ஆஸ்திரேலிய அணியில் மார்ஷ், மேக்ஸ்வெல், கிரீன், ஸ்டோய்னிஸ் அதிரடியில் அசத்துவார்கள் என்று நம்பலாம். இந்திய அணியிலும் இளம் வீரர்கள் சுப்மன்கில் – இஷான்கிஷான், விராட்கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக், ஜடேஜா ஆகியோர் அசத்துவார்கள் என்று நம்பலாம்.


இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்த ஆஸ்திரேலிய அணி ஒருநாள் தொடரையாவது வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் களமிறங்கி உள்ளது. இதனால், முதல் போட்டியை வெற்றியுடன் தொடங்க வேண்டும் என்ற ஆர்வத்தில் ஆஸ்திரேலிய அணி களமிறங்கி உள்ளது. வான்கடே மைதானம் சேசிங்கிற்கு சாதகமாக இருக்கும் என்பதால் இந்திய அணி கேப்டன் ஹர்திக்பாண்ட்யா சேசிங்கை தேர்வு செய்துள்ளார்.  19-ந் தேதி விசாகப்பட்டினத்தில் 2வது ஒருநாள் போட்டியிலும், மூன்றாவது ஒருநாள் போட்டி வரும் 22-ந் தேதி சென்னையிலும் நடக்க உள்ளது. 


மேலும் படிக்க: Smriti Mandhana in WPL: ஆறு போட்டிகளில் விளையாடி 100 ரன்கள் கூட இல்லை.. அதிகளவில் ட்ரோல் செய்யப்படும் கேப்டன் மந்தனா..!


மேலும் படிக்க: முதல் வெற்றியை பதிவு செய்த ஆர்சிபி… புள்ளிப்பட்டியலில் மாற்றம்! தகுதி பெற இன்னும் வாய்புள்ளதா?