ஐபிஎல் தொடர் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. குஜராத், ராஜஸ்தான், லக்னோ மற்றும் பெங்களூரு அணிகள் ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. ஐபிஎல் தொடருக்கு பின்பு இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்கா அணியுடன் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது. 


 


இந்நிலையில் தென்னாப்பிரிக்கா தொடருக்கான இந்திய அணியின் தேர்வு இன்று நடைபெற உள்ளது. இதற்காக தேர்வுக்குழு உறுப்பினர்கள் மற்றும் இந்திய அணியின் கேப்டன் ரோகித் மற்றும் பயிற்சியாளர் டிராவிட் ஆகியோர் இடம்பெறும் கூட்டம் இன்று நடைபெற உள்ளது. இதில் வீரர்கள் தேர்வு குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய உம்ரான் மாலிக் உள்ளிட்ட வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


 


மேலும் தென்னாப்பிரிக்க தொடருக்கு ரோகித் சர்மாவிற்கு ஓய்வளிக்கப்படும் என்று கருதப்படுகிறது. இதனால் அணியின் கேப்டனாக ஷிகர் தவான் அல்லது  ஹர்திக் பாண்ட்யா நியமிக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. ரோகித் சர்மாவுடன், விராட் கோலி, பும்ரா, முகமது ஷமி ஆகிய வீரர்களுக்கும் ஓய்வளிக்கப்படும் என்று கூறப்படுகிறது. 




அத்துடன் முன்னணி வீரர்கள் தென்னப்பிரிக்க தொடர் பாதியில் இங்கிலாந்து சுற்றுப்பயணம் சென்று அங்கு நடைபெற உள்ள டெஸ்ட் போட்டிக்கு தயாராக பயிற்சி மேற்கொள்வார்கள்  என்று கருதப்படுகிறது. இதனால் அவர்கள் தென்னாபிரிக்க தொடரில் களமிறங்க வாய்ப்பு குறைவு என்று தெரிகிறது. இங்கிலாந்து அணிக்கு எதிராக ஒரு டெஸ்ட், 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி களமிறங்க உள்ளது. கடந்த வருடம் நடைபெற்ற தொடரில் மீதமுள்ள அந்த ஒரு டெஸ்ட் போட்டி வரும் ஜூலை 1ஆம் தேதி தொடங்க உள்ளது. 


இந்தியா-தென்னாப்பிரிக்கா தொடர்:


ஜூன் 9- முதல் டி20-டெல்லி


ஜூன் 12-இரண்டாவது டி20-கட்டக்


ஜூன் 14-மூன்றாவது டி20-விசாகபட்டினம்


ஜூன் 17-நான்காவது டி20-ராஜ்கோட்


ஜூன் 19-ஐந்தாவது டி20-பெங்களூரு


 


இன்று தேர்வுக்குழு கூட்டம் முடிந்த பிறகு மாலை அல்லது நாளை காலை இந்திய அணி தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று கருதப்படுகிறது. இந்திய அணியில் எந்தெந்த புதிய வீரர்கள் இடம்பெற உள்ளனர் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண