ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணி நேற்று முன்தினம்  அறிவிக்கப்பட்டது. இந்தத் தொடருக்கான இந்திய அணியில் மீண்டும் கே.எல்.ராகுல் மற்றும் விராட் கோலி ஆகிய இருவரும் இடம்பெற்றுள்ளனர். அத்துடன் தமிழ்நாட்டைச் சேர்ந்த சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின் இடம்பெற்றுள்ளார். மற்றொரு தமிழக வீரரான வாஷிங்டன் சுந்தர் அணியில் இடம்பெறவில்லை. 


ஃபார்மிற்காக போராடி வரும் முன்னாள் இந்திய கேப்டன் விராட் கோலி வரவிருக்கும் ஆசிய கோப்பை 2022 தொடரில் 41 நாள் ஓய்வுக்கு பிறகு திரும்புகிறார். பலரும் இந்திய அணிக்குள் விராட் கோலி வருகை குறித்து பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். ஒரு சிலர் விராட் கோலி அணிக்குள் இருப்பது பலம்தான். தொடக்க விக்கெட்கள் டக்கென்று சரிந்தால் கோலி சரிவில் இருந்து மீட்பார் என்றும், மற்ற சிலர் சுத்தமாக பார்மில் இல்லாத ஒருவரை எப்படி அணியில் எடுக்கலாம், அதற்கு ஒரு இளம் வீரருக்கு வாய்ப்பு வழங்கலாமே என்றும் தெரிவித்து வருகின்றனர். 


இந்த நிலையில், ஆசிய கோப்பைரோஹித் சர்மா தலைமையிலான அணி வருகின்ற ஆகஸ்ட் 28 ம் தேதி அன்று பாகிஸ்தானுக்கு எதிராக தனது முதல் போட்டியில் களமிறங்குகிறது. இந்த போட்டியின் சிறப்பு என்னவென்றால், பாகிஸ்தான் அணிக்கு எதிராக விராட் கோலி தனது 100 வது டி20 போட்டியில் விளையாட இருக்கிறார். கடந்த 2010 ம் ஆண்டு ஜிம்பாவே அணிக்கு எதிராக டி20 தொடரில் அறிமுகமான கோலி, தனது 100 வது டி20 போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக களமிறங்குவது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 






கடந்த 7 இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக கோலியில் ரெக்கார்ட் :


கடந்த 7 இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக விராட் கோலி  3 அரைசதம் உள்பட 311 ரன்கள் குவித்துள்ளார். அவரது ரன்கள் முறையே 78, 9, 27, 36, 49, 55, 57 பதிவு செய்துள்ளார். அதேபோல், பாகிஸ்தானுக்கு எதிராக 77.75 ஆவரேஜ் உடன் 118. 25 ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ளார். 


டி20 தொடரில் விராட் கோலியின் பங்களிப்பு :



  • கோஹ்லி 99 டி20 போட்டிகளில் விளையாடி 3308 ரன்களும் சராசரி 50.12 ரன்களும் எடுத்துள்ளார்.

  • 33 வயதான அவர் 137.66 ஸ்ட்ரைக் ரேட்டில் 30 அரை சதங்களை அடித்துள்ளார்.






விராட் கோலியின் டி20 சாதனை: 


ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் கோஹ்லியின் சாதனை பல இருந்தாலும், டி20யிலும் அவரது சாதனை அதிக கவனம் பெற்றது. ஒரு காலத்தில், அனைத்து வடிவங்களிலும் சராசரியாக 50 பிளஸ் பெற்ற ஒரே ஒரு வலது கை பேட்ஸ்மேனாக கோலி இருந்தார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண