ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடர் தோல்விக்கு பிறகு, இந்திய அணி அடுத்த ஆண்டு சொந்த மண்ணில் நடைபெறும் ஒருநாள் உலகக் கோப்பை வெல்லும் முனைப்பில் உள்ளது. இதற்காக டி20 உலகக் கோப்பை பின் நியூசிலாந்து சென்ற இந்திய அணி டி2ஒ தொடரை வென்ற கையோடு, ஒருநாளை தொடரை இழந்தது. 


இந்த தொடருக்கு பின்னர் இந்திய அணி, வங்கதேசத்திற்கு சுற்றுபயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் வங்கதேச அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, இந்திய அணியையும், ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதையடுத்து, இந்திய அணியின் தோல்விக்கு பல்வேறு காரணங்களை ரசிகர்கள் அடுக்கி வருகின்றனர். கேஎல் ராகுல் மிஸ் செய்த ஒரு கேட்சால் தோல்வி விழும்பில் இருந்த வங்கதேச அணி அபார வெற்றி பெற்றது. 


முழுநேர விக்கெட் கீப்பர் இஷான் கிஷன் பெஞ்சில் இருக்கும்போது, பார்ட் டைம் விக்கெட் கீப்பரான கேஎல் ராகுலுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது ஏன் என கேள்வி எழுந்தது.


இந்தநிலைமை நீடித்தால், அடுத்தாண்டு நடைபெறவுள்ள உலகக் கோப்பை ஒருநாள் தொடருக்கு இஷான் கிஷன், சஞ்சு சாம்சன் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் வீட்டிலிருந்து போட்டியை காணும் நிலை ஏற்படும். துணை கேப்டன் கேஎல் ராகுல் ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து விக்கெட் கீப்பர் செய்து 4வது இடத்தில் பேட் செய்வதாக அறிவித்துள்ளார். இந்திய அணிக்கு ஆல் ரவுண்டர்கள் தேவை அதிகம் என்பதால், கேஎல் ராகுலை விக்கெட் கீப்பராக தக்கவைக்க முடிவெடுக்கப்பட்டு வருகிறது. கேஎல் ராகுல் தொடர்ந்து இதே இடத்தில் விளையாடினால் இந்தியாவின் மூன்று தகுதியான கீப்பர்கள் பிளேயிங் லெவன் அணியில் இடம்பெற வாய்பில்லாமல் போய்விடும்.


அதேபோல், சூர்யகுமார் யாதவை 5வது இடத்தில் பேட் செய்தால், சாம்சன், இஷான் கிஷன் மற்றும் பண்ர் ஆகியோர் பேக்அப் விக்கெட் கீப்பர்களாக மட்டுமே இருப்பார்கள். இதன் காரணமாக கேஎல் ராகுலுக்கு காயம் ஏற்பட்டால் மட்டுமே இவர்களுக்கு விளையாட வாய்ப்பு கிடைக்கும். 


தவான் பார்ம்:


கடந்த சில தொடர்களில் ஷிகர் தவானுக்கு ஒருநாள் போட்டிகளில் வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. எனவே தனது இடத்தை தக்க வைத்துகொள்ள தவான், ரோகித்துடன் ஓபன் செய்வார். தொடர்ந்து, நேற்றைய போட்டியை போல் தவான் சொதப்பும் பட்சத்தில், கேஎல் ராகுல் தொடக்க வீரராக களமிறக்கப்பட்டு, மூன்று விக்கெட் கீப்பர்களில் யாருகேனும் வாய்ப்பு வழங்கலாம். 


யாருக்கு முதல் வாய்ப்பு..? 


கேஎல் ராகுல் மற்றும் ஷிகர் தவான் ஓய்வு எடுத்தாலோ அல்லது காயம் அடைந்தாலோ அவர்களில் ஒருவர் மட்டுமே இடம் பெறுவார். இந்திய அணி நிர்வாகம் அனைத்து வடிவங்களிலும் ரிஷப் பந்தை பெரிதும் விரும்புகிறது.இஷான் கிஷன் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோருக்கு இது பாதிப்பை ஏற்படுத்தும். 


எனவே, தவான் ஃபார்மை முழுமையாக இழந்தாலோ, காயம் ஏற்பட்டாலோ மட்டுமே, சஞ்சு மற்றும் இஷானை விட பண்ட்டுக்கு முதல் முன்னுரிமை கிடைக்கும்.


6வது இடத்தில் இருந்து ஆல்ரவுண்டர்களுக்கு முன்னுரிமை இருப்பதால், மற்ற கீப்பர்கள் இந்தியாவின் பிளேயிங் லெவன் அணியில் இடம்பெறுவது கிட்டத்தட்ட சாத்தியமற்றதாகவே பார்க்கப்படுகிறது.