இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்துவீச்சாளர்களில் ஒருவர் ரவிச்சந்திரன் அஷ்வின். இவர் இன்று தன்னுடைய சுழற்பந்துவீச்சின் மூலம் பல வீரர்களை திணறடித்துள்ளார். ரவிச்சந்திரன் அஷ்வின் இன்று தன்னுடைய 36வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். 


 


இந்நிலையில் அவர் செய்த சிறப்பான தரமான சம்பவங்கள் என்னென்ன?


 


4-55 vs ஆஸ்திரேலியா(அடிலெய்டு 2020):


2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு நகரில் பகலிரவு டெஸ்ட் நடைபெற்றது. இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின் பந்துவீச்சில் அசத்தினார். குறிப்பாக ஆஸ்திரேலிய அணியின் ஸ்டீவ் ஸ்மித் விக்கெட்டை எடுத்து அசத்தினார். அத்துடன் 55 ரன்கள் விட்டுக் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். 


 






4-62 vs இங்கிலாந்து(எட்ஜ்பாஸ்டன் 2018):


2018ஆம் ஆண்டு இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் எட்ஜ்பாஸ்டன் நகரில் நடைபெற்ற போட்டியில் அஷ்வின் அசத்தினார். இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணியின் குக், பட்லர் உள்ளிட்ட வீரர்களை ஆட்டமிழக்க செய்தார்.  அத்துடன் 62 ரன்கள் விட்டுக் கொடுத்து 4 விக்கெட் எடுத்து அசத்தினார். 


 


6-42 vs இலங்கை(காலே, 2015):


இலங்கை மண்ணில் இந்திய கிரிக்கெட் அணி 2015ஆம் ஆண்டு சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் தொடரில் விளையாடியது. அதில் காலே மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்தப் போட்டியில் சிறப்பாக பந்துவீசிய அஷ்வின் 42 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தினார். இதன்காரணமாக முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி 183 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இலங்கை அணியில் சுழற்பந்துவீச்சாளர்களை அதிகம் எதிர்கொள்ளும் வீரர்கள் இருந்தும் அஷ்வின் சிறப்பாக பந்துவீசி அசத்தினார். 


 






இவ்வாறு அஷ்வின் டெஸ்ட், ஒருநாள், டி20 போட்டிகளில் பல்வேறு முறை பேட்ஸ்மேன்களை திணறடித்துள்ளார். இவர் இந்தியாவிற்காக 86 டெஸ்ட் போட்டிகளில் 442 விக்கெட்கள், 113 ஒருநாள் போட்டிகளில் 151 விக்கெட்கள், 56 டி20 போட்டிகளில் 66 விக்கெட்கள் எடுத்துள்ளார். மொத்தமாக சர்வதேச போட்டிகளில் இவர் 659 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். இவருடைய பிறந்தநாளை முன்னிட்டு கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துகளை பதிவிட்டு வருகின்றனர்.