பொல்லார்ட் தலைமையிலான மேற்கிந்திய தீவுகள் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டி20 தொடரில் ஆடி வருகிறது. அகமாதாபாத்தில் நடைபெற்ற ஒருநாள் தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இந்த நிலையில், இரு அணிகளும் மோதும் முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி கொல்கத்தாவின் புகழ்பெற்ற ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற உள்ளது.
இந்த நிலையில், இந்திய கேப்டன் ரோகித் சர்மா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவரிடம் விராட்கோலியின் பார்ம் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதனால், ரோகித் சர்மா கோபமடைந்தார். கோபப்பட்ட ரோகித்சர்மா, “ நீங்கள் அமைதியாக இருந்தாலே அவர் நன்றாக இருப்பார் என்று நினைக்கிறேன். உங்கள் பக்கத்தில் இருந்து அதிகம் பேச வேண்டிய அவசியமில்லை. ஒரு தசாப்தத்திற்கு மேலாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அவர் ஆடி வருகிறார். இவ்வளவு காலத்திற்கு ஒருவர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் ஆடினால், அழுத்தங்களை எவ்வாறு சமாளிப்பது என்று அவருக்கு நன்றாகவே தெரியும். இது எல்லாம் உங்களிடம் இருந்துதான் தொடங்குகிறது. நீங்கள் அமைதியாக இருந்தாலே எல்லாமே சரி ஆகிவிடும்.”
என்று ஆவேசத்துடன் பேசினார்.
தோனிக்கு பிறகு இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டனாக வலம் வந்த விராட்கோலிக்கு கடந்தாண்டு மோசமான ஆண்டாக அமைந்தது. மற்ற இந்திய கேப்டன்களை காட்டிலும் ஒருநாள், டெஸ்ட் மற்றும் டி20களில் அதிக வெற்றிகளை கொண்ட கேப்டனான விராட்கோலி சாம்பியன்ஸ் கோப்பை மற்றும் ஐ.பி.எல். கோப்பைகளை கைப்பற்றவில்லை என்று தந்த அழுத்தத்தால் தனது கேப்டன்சியை கடந்தாண்டு ராஜினாமா செய்தார்.
தென்னாப்பிரிக்க தொடரில் கேப்டன்சியையும் ராஜினாமா செய்தார். விராட்கோலி சர்வதேச போட்டிகளில் சதமடித்து நீண்ட நாட்கள் ஆனதாலும், கடந்த சில போட்டிகளில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வருவதாலும் கடும் விமர்சனங்கள் எழுந்து வருகிறது. விராட்கோலிக்காக ரோகித் சர்மா கோபப்படும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. கடந்த உலககோப்பை டி20 போட்டியில் ரோகித்சர்மாவிற்காக நிருபர்களிடம் விராட்கோலி கோபப்படடார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்