சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) ஆண்டின் சிறந்த  டி20 வீரராக தேர்வு செய்ய இந்திய அதிரடி பேஸ்ட்மேனான சூர்யகுமார் யாதவ் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.


சிறந்த வீரர்:


சிகந்தர் ராஸா (ஜிம்பாப்வே), சாம் கர்ரன் (இங்கிலாந்து), முகமது ரிஸ்வான் (பாகிஸ்தான்),  ஆகியோரின் பெயர்களும் இந்தப் பரிந்துரை பட்டியலில் இடம்பெற்றுள்ளது. வலது கை ஆட்டக்காரரான சூர்யகுமார் யாதவ், டி20 இல் மொத்தம் 1164 ரன்களை குவித்தார். இந்த ஆண்டைப் பொறுத்தவரை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, சென்ற ஆண்டில் 781 ரன்களை டி20 கிரிக்கெட்டில் எடுத்திருந்தார்.


ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் விராட் கோலி சதம் விளாசினார். இந்த காலண்டர் ஆண்டில் சூர்ய குமார் யாதவ், 68 சிக்ஸர்களை விளாசினார்.  டி20 உலகக் கோப்பையை இங்கிலாந்து அணி வெல்வதற்கு முக்கிய காரணமாக இருந்த சாம் கர்ரன் ஆண்டின் சிறந்த வீரர் விருதை வெல்வதற்கான போட்டியில் முன்னணியில் இருக்கிறார்.


சூர்யகுமார் யாதவ்:


2022 இல் மொத்தம் 24 டி20 ஆட்டங்களில் சிகந்தர் ராஸா மொத்தம் 735 ரன்கள் எடுத்து, 25 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். பாகிஸ்தானின் முகமது ரிஸ்வான் இந்த ஆண்டு 25 ஆட்டங்களில் விளையாடி 960 ரன்கள் எடுத்தார். இவர், கடந்த ஆண்டின் சிறந்த வீரராகத் தேர்வு செய்யப்பட்டார்.


சூர்ய குமார் யாதவ், டி20 கிரிக்கெட்டின் சிறந்த வீரராக திகழ்ந்து வருகிறார். மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி கவனம் ஈர்த்தார்.


2014-2017 வரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக அவர் விளையாடினார். பாபா அணுசக்தி ஆராய்ச்சி மையத்தில் வேலைக்கு சேருவதற்காக மும்பைக்கு இடம்பெயர்ந்தார் சூர்யகுமார் யாதவின் தந்தை.
அப்போது சூர்யகுமார் யாதவுக்கு 10 வயது. அந்த வயதிலேயே அவர் கிரிக்கெட் விளையாடுவதில் அதிக ஆர்வம் காட்டியதன் காரணமாக அவரை கிரிக்கெட் பயிற்சி மையத்தில் அவரது தந்தை சேர்த்துவிட்டார்.