இந்திய வம்சாவளியினர் இரண்டு பேர் நியூசிலாந்து அணிக்காக விளையாடி வருகின்றனர். ஒருவர் ரச்சின் ரவீந்திரா மற்றொரு வீரர் அஜஸ் படேல். இந்த நிலையில் வெளிநாட்டு அணிகளுக்காக விளையாடும் இந்திய வம்சாவளி கிரிக்கெட் வீரர்கள் யார் என்பதை இந்த தொகுப்பில் பார்ப்போம்.


நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அதன்படி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணியை நியூசிலாந்து அணி எதிர்கொள்கிறது. இதில் முதல் போட்டி நேற்று தொடங்க இருந்த நிலையில் பெங்களூருவில் ஏற்பட்ட கனமழை காரணமாக இன்று முதல் போட்டியின் முதல் நாள் ஆட்டம் தொடங்கியது.


வெளிநாட்டு அணிகளுக்காக விளையாடும் இந்திய வம்சாவளி கிரிக்கெட் வீரர்கள்:


அந்த வகையில் முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி 46 ரன்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இதனைத் தொடர்ந்து தங்களது முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி பேட்டிங் செய்து வருகிறது. இந்த போட்டியில் இந்திய வம்சாவளியினர் இரண்டு பேர் நியூசிலாந்து அணிக்காக விளையாடி வருகின்றனர். ஒருவர் ரச்சின் ரவீந்திரா மற்றொரு வீரர் அஜஸ் படேல்.


இந்த நிலையில் வெளிநாட்டு அணிகளுக்காக விளையாடும் இந்திய வம்சாவளி கிரிக்கெட் வீரர்கள் யார் என்பதை இந்த தொகுப்பில் பார்ப்போம்.


சவுரப் நேத்ரவல்கர்:


மும்பையைச் சேர்ந்த திறமையான இடது கை வேகப்பந்து வீச்சாளரான சவுரப் நேத்ரவல்கர், இந்தியாவின் U-19 அணியின் நம்பிக்கைக்குரிய வேகப்பந்து வீச்சாளராக தனது கிரிக்கெட் பயணத்தை தொடங்கினார். இருப்பினும், அவர் அமெரிக்காவிற்குச் சென்றபோது நிகழ்ந்த எதிர்பாராத திருப்பத்தால், அவர் அமெரிக்க கிரிக்கெட் அமைப்பில் ஒரு முக்கிய நபராக இடம்பெற்றார்.


2024 டி20 உலகக் கோப்பையின் போது நேத்ரவல்கர் அமெரிக்க கிரிக்கெட்டுக்கு ஏற்றவாறு விரைவாக தன்னை தயார் படுத்திக் கொண்டார். மேலும், ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகள் இரண்டிலும் ஒரு முக்கிய வீரராக திகழ்ந்தார்.


ரச்சின் ரவீந்திரா: 


இந்திய ஜாம்பவான்களான ராகுல் டிராவிட் மற்றும் சச்சின் டெண்டுல்கரின் பெயரை கொண்ட ரச்சின் ரவீந்திரா, நியூசிலாந்து கிரிக்கெட்டில் தனது பன்முகத்தன்மையை வெளிப்படுத்தினார். இந்திய வம்சாவளியை சேர்ந்த ரச்சின் ரவீந்திரா, வெலிங்டனில் பிறந்தார். நியூசிலாந்தின் கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் தனக்கென ஒரு இடத்தை பெற்றார். மேலும், அவரது இடது கை பேட்டிங் மற்றும் இடது கை சுழற்பந்து வீச்சால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். அத்துடன் ரச்சின் ரவீந்திரா ஒரு ஆல்ரவுண்டர் ஆவார்.


கேசவ் மகாராஜ்:


இந்தியப் பெற்றோருக்கு பிறந்த கேசவ் மகாராஜ், டர்பனில் வளர்ந்தார். இவரின் கிரிக்கெட் பயணம் முதலில் ஒரு வேகப்பந்து வீச்சாளராக தான் தொடங்கியது. அதற்கு பிறகே, தென்னாப்பிரிக்காவின் முதன்மையான இடது கை சுழற்பந்து வீச்சாளராக தன்னை கேசவ் மகாராஜ் நிலைநிறுத்திக் கொண்டார்.


நாசர் உசேன்:


நாசர் உசேன், சென்னையில் பிறந்து, இங்கிலாந்தில் வளர்ந்தவர். இங்கிலாந்தின் கிரிக்கெட் அணுகுமுறையை மாற்றி அமைத்ததில் இவரது பங்கும் உள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்தின் தரத்தை உயர்த்தினார். அத்துடன், இங்கிலாந்தின் கிரிக்கெட் மறுமலர்ச்சிக்கு நாசர் உசேன் அடித்தளம் அமைத்தார்.


அஜஸ் படேல்:


இந்தியாவின் மும்பையில் பிறந்தவர் அஜஸ் படேல். பந்து வீச்சாளரான இவர் தற்போது நியூசிலாந்து அணிக்காக விளையாடி வருகிறார். 19 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 7 டி 20 போட்டிகளில் நியூசிலாந்து அணிக்காக விளையாடி இருக்கிறார். பெங்களூருவில் நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரிலும் நியூசிலாந்து அணியில் இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.