சமூக வலைதளங்களில் பல்வேறு வீரர்களுக்கு ரசிகர்கள் தங்களுடைய கோரிக்கைவை முன்வைக்கின்றனர். அந்த கோரிக்கையை அந்த கிரிக்கெட் வீரர்கள் நிறைவேற்றும் பட்சத்தில் அது மிகவும் வைரலாகிறது. அந்தவகையில் ரசிகர் ஒருவர் வைத்த கோரிக்கையை இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் நிறைவேற்றியுள்ளார்.


ட்விட்டர் தளத்தில் ஆனந்த் என்ற ரசிகர் கடந்த 80 நாட்களுக்கு மேலாக தினமும் ஒரு கோரிக்கையை வைத்துள்ளார். அதாவது,”கிரிக்கெட் வீரர் அஷ்வினிடம் இருந்து பதில் பதிவு வரும் வரை நான் தினமும் ட்வீட் செய்வேன்” எனக் கூறி தினமும் ஒரு ட்வீட்டை செய்துள்ளார். இந்த ட்வீட்டை அவர் 81 நாட்கள் தொடர்ந்து செய்து வந்துள்ளார். 






இந்நிலையில் நேற்று கிரிக்கெட் வீரர் அஷ்வின் அந்த ட்வீட்டிற்கு பதில் பதிவு செய்துள்ளார். அதில், “என்னை மன்னிக்கவும் உங்களுடைய பதிவு என்னுடைய நோட்டிஃபிகேஷனில் இத்தனை நாட்கள் சரியாக காட்டவில்லை” எனப் பதிவிட்டுள்ளார். அதற்கு அந்த நபர், “என்னுடைய இன்றைய நாளை அண்ணா நீங்கள் சிறப்பாக மாற்றிவிட்டீர்கள். எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது” எனப் பதிவிட்டுள்ளார். 






இதேபோல் கடந்த மாதம் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னருக்கு ஒரு நபர் ட்விட்டரில் தொடர்ந்து ட்வீட் செய்து வந்தார். அந்த நபருக்கு டேவிட் வார்னர் பதில் அளித்தது மிகவும் வைரலானது. அதேபோல் தற்போது இந்திய கிரிக்கெட் வீரர் அஷ்வின் செய்ததும் மிகவும் வேகமாக வைரலாகி வருகிறது.  






மேலும் படிக்க: பாகிஸ்தான் வீரருக்கு பரிசு.. சர்ப்ரைஸ் கொடுத்து திக்குமுக்காட வைத்த தல தோனி.. என்ன பரிசு தெரியுமா?