கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல், பிசிசிஐயின் தேர்வுக் குழு, இடைக்காலத் தலைவரான ஷிவ் சுந்தர் தாஸ், மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்திற்கான 16 பேர் கொண்ட இந்திய அணியை அறிவித்தார்.


கழட்டிவிடப்பட்ட புஜாரா:


இந்திய அணி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ள நிலையில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் முகேஷ் குமார் போன்ற புதுமுக வீரர்கள் அணியில் இடம் பெற்றனர். வேகப்பந்து வீச்சாளர் ஷமி க்கு ஓய்வு என்ற நிலையில், இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பேட்டிங் சொதப்பலின் முழு பாரத்தை புஜாரா மீதும், பவுலிங் சொதப்பலை உமேஷ் யாதவ் மீதும் வைக்கும் முயற்சியாக இருவரின் நீக்கமும் அமைந்ததாக பலரும் விமர்சித்தனர்.



புஜாரா வெளியிட்ட வீடியோ


வரவிருக்கும் மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்திற்கான இந்திய டெஸ்ட் அணியில் இருந்து நீக்கப்பட்ட ஒரு நாளுக்குப் பிறகு, புஜாரா தனது பேட்டிங் பயிற்சி வீடியோவை ட்விட்டரில் பதிவு செய்தார். புஜாராவை விலக்கியது ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் இடையே ஒரு பெரிய விவாதத்தைத் தூண்டியது. WTC இறுதிப்போட்டியில் புஜாரா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்றாலும், மற்ற சிலரும் சரியாக ஆடவில்லை. அவர்களுக்கு வழங்கப்பட்ட வாய்ப்பு புஜாராவிற்கு வழங்கப்படாதது ஏன்? என்பதே பலரது கேள்வி. இந்த நிலையில் அவர்


சமூக ஊடகங்களில் பகிர்ந்த பதிவில், கிரீஸில் நின்று பல ஷாட்களை ஆடுவதை காணலாம். அந்த பதிவுடன் அவர் இரண்டே இரண்டு எமோஜிகளை மட்டுமே சேர்த்துள்ளார். ஒன்று கிரிக்கெட் பந்தும், மட்டையும் இருக்கும் எமோஜி, மற்றொன்று இதயத்தை குறிக்கும் எமோஜி.


தொடர்புடைய செய்திகள்: World Cup Qualifiers: முன்னாள் உலக சாம்பியனை மண்ணை கவ்வ வைத்த ஜிம்பாப்வே..! வெ. இண்டீஸ் பரிதாப தோல்வி..!


சுனில் கவாஸ்கர் கோபம்


முன்னதாக, புஜாராவை அணியில் இருந்து விலக்குவது குறித்து இந்தியாவின் புகழ்பெற்ற தொடக்க ஆட்டக்காரர் சுனில் கவாஸ்கர் தனது காட்டமான கருத்துகளை தெரிவித்திருந்தார். "அவர் ஏன் நீக்கப்பட்டார்? பேட்டிங் தோல்விகளுக்கு அவர் ஏன் பலிகடா ஆக்கப்பட்டார்? அவர் இந்திய கிரிக்கெட்டின் மிகச்சிறந்த பங்களிப்புகளை பாரபட்சமின்றி அளித்த ஆட்டக்காரர். நல்ல, பொறுமையான சாதனையாளர் அவர். ஆனால் அவருக்கு மில்லியன் கணக்கான பின்தொடர்பவர்கள் இல்லாததால் அவர் ஒதுக்கப்படுகிறார்.


அவரை நீக்கினால் கேட்க யாரும் இல்லை என்பதால் நீக்கப்படுகிறாரா? இதுதான் எனக்கு புரியாத ஒன்றாக உள்ளது. அவரை மட்டும் இறக்கிவிட்டு, தோல்வியுற்ற மற்றவர்களை வைத்து என்ன பிரயோஜனம்? எனக்கே ஒன்றும் தெரியவில்லை, ஏனென்றால், இப்போதெல்லாம் தேர்வுக் குழுத் தலைவர் ஊடகங்களுடன் பேசுவது இல்லை," என்று கவாஸ்கர் கூறினார்.






புஜாராவை நீக்கியதற்கு பதில் கூற வேண்டும்


"அவர் நாட்டுக்கான கிரிக்கெட்டை விளையாடி வருகிறார், அதனால், அவர் நிறைய ரெட் பால் கிரிக்கெட் விளையாடியுள்ளார், அதில் உள்ள நுணுக்கங்கள் என்னவென்று அவருக்குத் தெரியும். இன்று, 39-40 வயது வரை விளையாடலாம், நீங்கள் ரன்களை உற்பத்தி செய்யும் வரை, வயது ஒரு காரணியாக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. ரஹானே தவிர மற்ற அனைவரும் பேட்டிங்கில் சொதப்பினார்கள். புஜாரா ஏன் வீழ்ச்சிக்கு ஆளானார் என்பது தேர்வாளர்கள் விளக்க வேண்டிய ஒன்று, "என்று அவர் மேலும் கூறினார்.