இந்திய கிரிக்கெட் அணி இறுதியாக ஆஸ்திரேலியாவில் அக்டோபர் மாதம் தொடங்கவுள்ள ஐசிசி டி20 உலகக் கோப்பை 2022 தொடருக்கான ஜெர்சியை வெளியிட்டது. இந்த உலகக் கோப்பை தொடருக்கான மீண்டும் வானம்-நீல நிறத்தில் ஜெர்சியை கொண்டு வர பிசிசிஐ திட்டமிட்டு முடிவெடுத்துள்ளது. 














இந்தியா இதுவரை ஸ்கை-ப்ளூ ஜெர்சியில் மூன்று ஐசிசி பட்டங்களை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 


ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான T20I போட்டியின்போது ஆண்கள் கிரிக்கெட் அணி இந்த ஜெர்சியை அணிந்தி விளையாட இருக்கின்றனர். இந்தியாவின் அதிகாரப்பூர்வ கிட் ஸ்பான்சர் எம்பிஎல் மூலம் புதிய ஜெர்சி விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவித்தது. புதிய ஜெர்சி எப்போது வெளியிடப்படும் என்று இந்திய ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். அந்த காத்திருப்பு இன்று முடிவுக்கு வந்தது. 


இந்த புதிய ஜெர்சி 2007 டி20 உலகக் கோப்பையில் இருந்ததைப் போலவே, நீல நிறத்தின் லேசான நிறத்தைக் கொண்டுள்ளது. 2020 ஆம் ஆண்டில் MPL கிட் ஸ்பான்சராகப் பொறுப்பேற்ற பிறகு மாற்றப்பட்ட இது மூன்றாவது இந்திய ஜெர்சி ஆகும்.


நடந்து முடிந்த ஆசியக்கோப்பை தொடரில் இந்திய அணி வெளியேறியதற்கு முக்கிய காரணமாக பந்துவீச்சே பார்க்கப்பட்டது. பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிக்கு எதிரான போட்டியின்போது கடைசி கட்டத்தில் இந்திய அணி பந்து வீச்சில் சொதப்பி ஆசியக்கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது. இந்த நிலையில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடருக்கு முன்னதாக ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஹர்ஷல் படேல் காயங்களில் இருந்து மீண்டுள்ளனர். இது இந்திய அணிக்கு கூடுதல் போனஸ். மேலும் ஆஸ்திரேலியா தொடருக்கு எடுக்கப்பட்ட முகமது ஷமிக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில், அவருக்கு மாற்று வீரராக உமேஷ் யாதவ் அறிவிக்கப்பட்டார். 


இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக செப்டம்பர் 20 ஆம் தேதி மொஹாலியிலும், இரண்டாவது மற்றும் மூன்றாவது டி20 நாக்பூர் மற்றும் ஹைதராபாத்தில் செப்டம்பர் 23 மற்றும் செப்டம்பர் 25 ஆம் தேதிகளிலும் விளையாடுகிறது.


ஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணி:


ரோஹித் சர்மா (கேப்டன்), கே.எல். ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பந்த், தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, ஆர். அஷ்வின், யுஸ்வேந்திர சாஹல், அக்சர் படேல், புவனேஷ்வர் குமார் , ஹர்ஷல் படேல், தீபக் சாஹர், ஜஸ்பிரித் பும்ரா, உமேஷ் யாதவ்.