Mohammed Shami: 'நீ ஷமி இல்லயா! எங்க குல ஷாமி' உலகக் கோப்பையில் அதிக விக்கெட்டுகள்! சாதனை படைத்த முகமது ஷமி!

இந்த உலகக் கோப்பை தொடரில் இந்திய பந்து வீச்சாளர் முகமது ஷமி அதிக விக்கெட்டுகள் எடுத்து சாதனை படைத்துள்ளார்.

Continues below advertisement

ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்று (நவம்பர் 19) நடைபெற்று வருகிறது. குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.  இந்த போட்டியில் விக்கெட் எடுத்ததன் மூலம் இந்த உலகக் கோப்பை தொடரில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர் என்ற சாதனையை இந்திய பந்து வீச்சாளர் முகமது ஷமி படைத்துள்ளார்.

Continues below advertisement

இறுதிப் போட்டி:


ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் இந்த உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் களமிறங்கினார்கள். இதில், இந்திய அணியின் கேப்டன் ஆரம்பத்தில் அதிரடியாக விளையாடினார்.  

31 பந்துகள் களத்தில் நின்ற அவர் 4 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் என மொத்தம் 47 ரன்கள் குவித்தார். அதேபோல், விராட் கோலியும் 54 ரன்கள் எடுக்க அடுத்து வந்த ஸ்ரேயாஸ் உடனே விக்கெட்டை பறிகொடுத்தார். பின்னர் , வந்த கே.எல்.ராகுல் 107 பந்துகள் களத்தில் நின்று 66 ரன்கள் எடுக்க அடுத்து வந்த வீரர்கள் தொடர்ந்து விக்கெட்டை பறிகொடுக்க இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 240 ரன்கள் குவித்தது. 

அதிக விக்கெட்டுகள் எடுத்த முகமது ஷமி:

இந்த தொடரில் சிறப்பாக தன்னுடைய பங்களிப்பை வெளிப்படுத்தி வருகிறார் இந்திய பந்து வீச்சாளர் முகமது ஷமி(Mohammed Shami). தன்னுடைய பந்து வீச்சால் எதிரணி வீரர்களை மிரள வைத்து வருகிறார். 
 
அதன்படி, அவர் நடப்பு உலகக் கோப்பையில் 7 இன்னிங்ஸ்களில் 24 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தி இருக்கிறார்.  முன்னதாக, கடந்த அக்டோபர் 22 ஆம் தேதி நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் அற்புதமாக பந்து வீசினார் ஷமி.

அந்த போட்டியில் 10 ஓவர்கள் வீசிய ஷமி 54 ரன்கள் மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதேபோல், இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 7 ஓவர்கள் வீசி 2 ஓவர்களை மெய்டன் செய்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.இலங்கை அணிக்கு எதிரான போட்டியிலும் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார் ஷமி.

 தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக 2 விக்கெட்டுகள், நவம்பர் 15 ஆம் தேதி நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற   அரையிறுதிப் போட்டியில் 7 விக்கெட்டுகள் எடுத்தார். அதேபோல், நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வரும் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் தற்போது 1 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். 

இச்சூழலில், ஒட்டிமொத்தமாக சர்வதேச உலகக் கோப்பையில் இது வரை 18 இன்னிங்ஸ்கள் விளையாடி உள்ள முகமது ஷமி  24 விக்கெட்டுகளை வீழ்த்தி உலகக் கோப்பை போட்டியில் அதிக விக்கெட்டுகளை எடுத்த வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: IND vs AUS Final Score LIVE: திணறும் இந்தியா.. கோலி அவுட்.. மைதானத்தை அதிர்ச்சியில் ஆழ்த்திய பேட் கம்மின்ஸ்..!

மேலும் படிக்க: IND vs AUS Final: ரசிகர்களே! டாஸ் தோற்றால் இந்தியாவுக்கு இப்படித்தான் நடக்கும்! வரலாறு சொல்வது என்ன?

Continues below advertisement