சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் ஒரு அணிக்கு எதிராக அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார் ரோகித் சர்மா. அது தொடர்பான விவரங்களை இந்த தொகுப்பில் பார்ப்போம்:


குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று ( நவம்பர் 19) உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் அதிரடியாக விளையாடிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா 3 சிக்ஸர்கள் பறக்கவிட்டார்.


உலகக் கோப்பை தொடரில் அதிக சிக்ஸர்கள்:


நடப்பு உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா தன்னுடைய பங்களிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி வருகிறார். அந்த வகையில் இந்த உலகக் கோப்பை தொடரில் சிக்ஸர் மழை பொழிந்தார். அதன்படி, மொத்தம் 31 சிக்ஸர்களை பறக்கவிட்டுள்ளார்.


மேலும், இந்த உலகக் கோப்பையில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் ரோகித் சர்மா தான் முதல் இடத்தில் இருக்கிறார்.  இதில் இரண்டாவது இடத்தில் 24 சிக்ஸர்களுடன் இந்திய அணி வீரர் ஸ்ரேயாஸ்  இருக்கிறார். மேலும், ஒட்டுமொத்த உலகக் கோப்பை போட்டிகளிலும் அதிக சிக்ஸர் அடித்த வீரர் என்ற சாதனையையும் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா தான் வைத்துள்ளார்.


அதன்படி, ஒட்டுமொத்த உலகக் கோப்பை தொடரிலும் 54 சிக்ஸர்களை பறக்க விட்டுள்ளார். முன்னதாக இந்த சாதனையை நியூசிலாந்து அணி வீரர் கேன் வில்லியம்சன் தன்வசம் வைத்திருந்தார். அதேபோல், தொடர்ச்சியாக ஒருநாள் உலகக் கோப்பைகளில் அடுத்தடுத்து 500 ரன்களுக்கு மேல் எடுத்த ஒரே வீரர் என்ற பெருமையையும் ரோஹித் பெற்றார்.


 


 







ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிக சிக்ஸர்கள்:


 


சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் ஒரு அணிக்கு எதிராக அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற பெருமையை ரோகித் சர்மா பெற்றிருக்கிறார். அதன்படி, ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக மொத்தம் 87 சிக்ஸர்களை பறக்கவிட்டுள்ளார்.


 முன்னதாக, ஒரு அணிக்கு எதிராக அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற பெருமையை வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெய்ல் தன் வசம் வைத்திருந்தார். அவர், இங்கிலாந்து அணிக்கு எதிரான மொத்தம் 85 சிக்ஸர்களை பறக்கவிட்டிருந்தார். அந்த சாதனையைத்தான் தற்போது ரோகித் சர்மா முறியடித்திருக்கிறார். 



முன்னதாக இந்த பட்டியலில், மூன்றாவது இடத்தில் இருக்கும் ஷகித் அப்ரிடி இலங்கை அணிக்கு எதிராக 63 சிக்ஸர்களையும், இலங்கை வீரர் ஜெயசூர்யா பாகிஸ்தான் அணிக்கு எதிராக 53 சிக்ஸர்களையும் பறக்கவிட்டுள்ளனர்.


மேலும் படிக்க: IND vs AUS Final Score LIVE: திணறும் இந்தியா.. கோலி அவுட்.. மைதானத்தை அதிர்ச்சியில் ஆழ்த்திய பேட் கம்மின்ஸ்..!


 


மேலும் படிக்க: Watch Video: காதை கிழிக்கும் சத்தம்...! வானத்தில் விமான சாகசம்...! உற்சாகத்தில் உலகக்கோப்பை கிரவுண்ட்