இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு

BCCI Announcement 125 Crore: டி20 உலக கோப்பை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசுத் தொகையை பிசிசிஐ அறிவித்துள்ளது. 

Continues below advertisement

டி20 உலக கோப்பை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசுத் தொகையை பிசிசிஐ வழங்கும் என அதன் செயலாளர் ஜெய்ஷா தெரிவித்துள்ளார். 

Continues below advertisement

கோப்பையை வென்ற இந்திய அணி:

மேற்கிந்திய தீவுகளில் உள்ள பார்படாஸில் நேற்று நடந்த டி20 உலகக் கோப்பை 2024 இறுதிப்போட்டியில், தென்னாப்பிரிக்கா அணியை, இந்திய அணி வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் 17 ஆண்டுகளுக்குப் பிறகு டி20 உலகக் கோப்பையை வென்றுள்ளது. 11 ஆண்டுகளுக்குப் பிறகு ஐசிசி கோப்பையை வென்று இந்திய அணி அசத்தியுள்ளது.

ரசிகர்கள் மகிழ்ச்சி - தலைவர்கள் வாழ்த்து:

இந்திய அணி வெற்றி பெற்றது, இந்திய கிரிக்கெட் அணியின் ரசிகர்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த ஆட்டத்தின் தொடக்கத்தில் , இந்திய அணியின பக்கம் ஆட்டம் சாதகமாக இருந்த நிலையில், சில நிமிடங்களில் தென்னாப்பரிக்கா வசம் ஆட்டம் சென்றது. இதையடுத்து, சோகமாக இருந்த இந்திய ரசிகர்களை, பும்ரா மற்றும் பாண்டியாவின் பவுலிங்கின் பந்துவீச்சு மாற்றியது. இதையடுத்து, இந்திய அணியின் பக்கம் ஆட்டம் மாறத் தொடங்கியது. கடைசிவரை ஆட்டம் விறுவிறுப்பாக சென்று , இந்திய அணி வெற்றி பெற்றது. இந்திய அணியின் அனைத்து வீரர்களுமே சிறப்பாக விளையாடினர். 

இந்திய அணி வெற்றி பெற்றமைக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உள்பட பல தலைவர்கள் இந்திய கிரிக்கெட் அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ரூ. 125 கோடி அறிவிப்பு:

இந்நிலையில் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ள X பதிவில், ICC ஆடவர் T20 உலகக் கோப்பை 2024ஐ வென்றதற்காக இந்திய அணிக்கு INR 125 கோடி பரிசுத் தொகையை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். போட்டி முழுவதும் அந்த அணி சிறப்பான திறமை, உறுதிப்பாடு மற்றும் விளையாட்டுத்திறனை வெளிப்படுத்தியுள்ளது. இந்த சிறந்த சாதனைக்காக அனைத்து வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் துணை ஊழியர்களுக்கு வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார். 

Continues below advertisement