முகமது சிராஜ் தற்போது இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர். இவர் பிசிசிஐ ‘ஏ' கிரேடு பிரிவுகளில் உள்ளார். இந்தநிலையில், முகமது சிராஜ் இன்று தனது 31வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். 


முகமது சிராஜின் பிறந்தநாளையொட்டி, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் சமூக வலைதளங்கள் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளது. 






இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் 13 மார்ச் 1992 அன்று ஹைதராபாத்தில் பிறந்தார். இவரது தந்தை பெயர் முகமது கவுஸ். சிராஜ் சிறு வயதாக இருந்தபோது அவரது தந்தை ஒரு ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநராக இருந்து வந்தார். தாய் ஷபானா பேகம் இல்லத்தரசி. இவ்வாறான நிலையில் சிராஜ் தான் சிறு வயது முதலே கிரிக்கெட் வீரராக உருவெடுக்க, கேட்டரிங் வேலையெல்லாம் பார்த்து மிகவும் கஷ்டப்பட்டதாக தெரிவித்தார். மேலும், அவர் ஒரு பேட்டியில் தனது குடும்பம் மிகவும் ஏழ்மையானது. எனது தந்தையின் சம்பாத்தியத்தில்தான் குடும்பமே ஓடியது. என்னை கிரிக்கெட் வீரராக்க எனது தந்தை அவ்வளவு கஷ்டத்திலும் தினமும் 100 ரூபாய் கொடுத்து, அந்த பணத்தில் கிரிக்கெட் பயிற்சிக்கு சென்றேன் என்று தெரிவித்திருந்தார். 


கிரிக்கெட் வாழ்க்கை ஆரம்பம்: 


முகமது சிராஜ் 7 வயதில் இருந்து கிரிக்கெட் விளையாடி வருகிறார். ஆரம்ப காலத்தில் முகமது சிராஜ் டென்னிஸ் பந்தில் விளையாடும் போது பல ஜாம்பவான்களை கவர்ந்ததாக கூறப்படுகிறது. 


கடந்த 2015-16 ரஞ்சி டிராபியில் ஹைதராபாத் அணிக்காக சிராஜ் தனது முதல் தர போட்டியில் அறிமுகமாகி சிறப்பாக செயல்பட தொடங்கினார். இதன்பிறகு, 2016-17 ரஞ்சி டிராபியில் 41 விக்கெட்டுகளை வீழ்த்தி ஹைதராபாத் அணிக்காக அதிக விக்கெட் வீழ்த்தியவர் ஆனார். ஐபிஎல்லில் முதன்முறையாக ஏலம் எடுக்கப்பட்ட அந்த தருணம் அவருக்கு மிகவும் சிறப்பு வாய்ந்ததாக அமைந்தது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் சிராஜை சுமார் ரூ.2.6 கோடிக்கு வாங்கியது.






தற்போது முகமது சிராஜின் சராசரி மாத வருமானம் சுமார் ரூ. 80 லட்சம் என்று கூறப்படுகிறது. இதில் முக்கியமாக ஐபிஎல்லில் ஆர்சிபிக்காக விளையாடியதற்காக அவர் செலுத்திய ரூ.7 கோடியும் அடங்கும். சிராஜ் பல ரியல் எஸ்டேட் சொத்துக்கள் தவிர ஹைதராபாத்தில் ஒரு சொகுசு வீட்டையும் தற்போது வாங்கியுள்ளார். 


முகமது சிராஜ் கார் மீதும் அதிகம் பிரியம் கொண்டவர் என்று கூறப்படுகிறது. கடந்த ஆடு ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திலிருந்து திரும்பிய உடனேயே BMW செடான் வாங்கினார். இது தவிர, சிராஜ் தனது முதல் ஐபிஎல் சம்பளத்தில் இருந்து டொயோட்டா கரோலாவை வாங்கினார். கபா ஆஸ்திரேலிய டெஸ்ட் போட்டியை எவரும் அவ்வளவு எளிதில் மறக்கமாட்டார்கள். அவரது அற்புதமான ஆட்டத்திற்குப் பிறகு ஆனந்த் மஹிந்திராவால் மஹிந்திரா தார் பரிசாகப் பெற்ற கிரிக்கெட் வீரர்களில் சிராஜும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.