2011ம் ஆண்டின் இறுதிப் போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தி இந்திய அணி ஒருநாள் உலகக் கோப்பையில் இரண்டாவது பட்டத்தை இன்று (ஏப்ரல் 2) வென்ற நாள்.


மகேந்திர சிங் தோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 13 ஆண்டுகளுக்கு முன்பு வரலாறு படைத்தது. ஏப்ரல் 2, 2011 அன்று மும்பையில் நடைபெற்ற உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது . இதையடுத்து, எம்.எஸ். தோனி தலைமையிலான இந்திய அணி 2011 ஒருநாள் உலகக் கோப்பையை வென்று சரித்திரம் படைத்தது.


இந்திய அணியில் அதிகபட்சமாக கவுதம் கம்பீர் 97 ரன்களும், கேப்டன் தோபி 91 ரன்களும் எடுத்து இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வெல்ல முக்கிய காரணமாக இருந்தனர். 


மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் தோனி அடித்த சிக்ஸர், கிரிக்கெட் காதலர்களின் இதயங்களிலும் மனங்களிலும் என்று மறக்க முடியாதவை. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 28 ஆண்டுகால ஒருநாள் உலகக் கோப்பை வறட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தது. இதற்கு முன் கடந்த 1983ல் கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி முதல் ஒருநாள் உலகக் கோப்பையை வென்றது. பின்னர், கடந்த 2011ம் ஆண்டு தோனி தலைமையிலான இந்திய அணி 28 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வரலாறு படைத்தனர். 






உலகக் கோப்பை போட்டியின் இறுதிப்போட்டியில் கேப்டன் தோனிக்கு ‘பிளேயர் ஆஃப் தி மேட்ச்’ விருதும், யுவராஜ் சிங்கிற்கு ‘தொடர் ஆட்டநாயகன்; விருதும் வழங்கப்பட்டது. இந்த உலகக் கோப்பையை வென்ற இந்தநாளை அனைவராலும் மறக்க முடியாத ஒன்று. அதன்பிறகு, இந்திய அணியால் உலகக் கோப்பையை வெல்ல முடியவில்லை. 


போட்டி சுருக்கம்: 


இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி மஹேல ஜெயவர்தனேவின் சதத்தால் 274 ரன்களை எடுத்தது. இதையடுத்து இந்திய அணிக்கு 275 ரன்கள் என்ற சவாலான ஸ்கோர் இருந்தது. முதல் 7 ஓவர்களிலேயே வீரேந்திர சேவாக் மற்றும் சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் அவுட்டாகி இந்திய அணிக்கு அதிர்ச்சி அளித்தனர். இதன்பின்னர், விராட் கோலியுடன் இணைந்து கௌதம் காம்பீர் ரன்களை விரட்ட தொடங்கினார். மூன்றாவது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 83 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. 


தில்கரத்ன தில்சன் விராட் கோலியின் அற்புதமான கேட்சை எடுத்து பெவிலியன் அனுப்பினார். இதையடுத்து, 5வது இடத்தில் பேட் செய்ய வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட யுவராஜ் சிங்கிற்கு பதிலாக தோனி களமிறங்கினார். 


மிடில் ஓவரில் கவுதம் கம்பீருடன் சேர்ந்து ரன்களை அடிக்க தொடங்கிய தோனி, ஐந்தாவது விக்கெட்டுக்கு 109 ரன்கள் எடுத்தார். திசாரா பெரரா வீசிய பந்தில் 97 ரன்கள் எடுத்த நிலையில், கவுதம் கம்பீர் க்ளீன் போல்டானார். தோனி கடைசி வரை நிலைத்து நின்று 48.2 வது ஓவரின் இரண்டாவது பந்தில் சிக்ஸர் அடித்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார். மறுமுனையில், யுவராஜ் சிங் 21 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.