டி20 உலகக்கோப்பையில் இந்தியா விளையாடும் இறுதி ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. உலககோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி, சூப்பர் 12 சுற்றோடு வெளியேறுகிறது. பாகிஸ்தான மற்றும் நியூசிலாந்திடம் பெற்ற தொடர் தோல்வியே இந்திய அணியின் வெளியேற்றத்திற்கு காரணமானது. 


அரை இறுதிக்கு கூட தகுதி பெறாமல் இந்திய அணி வெளியிருப்பது கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சிடைச் செய்த நிலையில், முதல் இரண்டு போட்டியில் தோல்வி பெற பல காரணங்களை பலரும் முன் வைக்கின்றனர். அவற்றில் ஒன்று, ஐபிஎல்.,யில் கொல்கத்தா அணியில் விளையாடிய வருண் சக்கரவர்த்தியை அணியில் சேர்த்ததும், அவர் விக்கெட் பெறாததும் தான் காரணம் என இன்றும் பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர். 






தமிழ்நாட்டைச் சேர்ந்த வருண் சக்கரவர்த்தி, டி20 உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணியின் பின்னடைவு குறித்தும், தனது தேர்வு குறித்தும் ஸ்டார் ஸ்போர்ட் தமிழுக்கு பேட்டி அளித்தார். இதோ அவரது பதில்...


‛இந்தியா தகுதி பெறாதது ஏமாற்றம் அளிக்கிறது. என்னுடைய தனிப்பட்ட பங்களிப்பு என்று பார்த்தால், எனக்கு எதிர்பார்த்த விக்கெட் எதுவும் விழவில்லை. ஆனால் நான் நன்றாக பந்து வீசினேன் என்று தான் நினைக்கிறேன். எனக்கு சிறப்பு ரோல் கொடுத்திருந்தார்கள். நானும் நன்றாக என் பணியை செய்தேன் என்றுதான் நினைக்கிறேன். ஆனால் இந்த முடிவு சோகமாக தான் உள்ளது. முதல் இரண்டு போட்டியில் இரண்டாவது பேட்டிங் செய்திருந்தால் நமக்கு சாதகமாக இருந்திருக்கும். இங்குள்ள மைதானங்கள் முதல் பேட்டிங் செய்பவர்களுக்கு சவாலாக உள்ளது. இரண்டாவது பேட்டிங் செய்பவர்களுக்கு சாதகமாக உள்ளது. 


இந்த மாதிரி மைதானத்தில் நான் விளையாடியதே இல்லை. முதல் இன்னிங்ஸ் மற்றும் இரண்டாவது இன்னிங்ஸிற்கு இவ்வளவு வித்தியாசம் கொண்ட மைதானத்தை இதுவரை பார்த்ததில்லை. இது மோசமான மைதானம். ஐபிஎல் போட்டியில் கேகேஆர்-ல் விளையாடும் போது பொறுப்பு இருந்தது. அதைவிட இந்திய அணிக்கு விளையாடும் போது இன்னும் கூடுதல் பொறுப்பு இருந்தது. அதை விட இந்திய அணிக்கு சிறப்பாக தான செயல்பட்டேன்.


நிறைய லெக்ஸ்பின்னர் பவுலர்களிடம் பேசினேன். இங்குள்ள மைதானத்தை பற்றி அவர்கள் கவலை தெரிவித்தனர். எனக்கும் அதே கவலை தான் இருந்தது,’ என்றனர். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


 


 


 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


 


 


 


பேஸ்புக் பக்கத்தில் தொடர


 


 


 


ட்விட்டர் பக்கத்தில் தொடர


 


 


 


யூடிபில் வீடியோக்களை காண