டி-20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்று இன்றுடன் முடிவுக்கு வருகிறது. க்ரூப்:1-ல் இருந்து இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகளும், க்ரூப்:2-ல் இருந்து பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகளும் அரை இறுதிக்கு முன்னேறியுள்ளன. இந்நிலையில், இதுவரை விளையாடியுள்ள நான்கில் இரண்டு போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ள இந்திய அணி, சூப்பர் 12 சுற்றோடு வெளியேறி உள்ளது. 

இன்று நடைபெற இருக்கும் கடைசி சூப்பர் 12 சுற்று போட்டியில், இந்தியா - நமிபியா அணிகள் மோதுகின்றன. நடப்பு டி-20 உலகக்கோப்பை தொடர் தொடங்குவதற்கு முன்பே, இந்த தொடர் முடிந்தவுடன் டி-20 கேப்டன்சி பதவியில் தான் விலகுவதாக கோலி அறிவித்திருந்தார். அதன்படி, இன்றோடு கேப்டன் கோலிக்கு இது கடைசி போட்டியாகும். இந்நிலையில், டி-20 கிரிக்கெட்டில் கேப்டனாக வழிநடத்தி வந்த கோலிக்கு டெஸ்ட், ஒரு நாள், டி-20 என அனைத்து கிரிக்கெட் ஃபார்மேட்களிலும் டாஸ் எந்த அளவிற்கு கைகொடுத்திருக்கிறது என்பதை பற்றி பார்ப்போம். நம்பர்கள் சொல்லும் செய்து இதுதான்!

ஒரு கிரிக்கெட் போட்டியில் டாஸ் என்பது முற்றிலும் ‘லக்’ சம்பந்தமானது. இதில் நிறைய கேப்டன்களுக்கு டாஸ் ஜெயிப்பது வழக்கமாகவும், இன்னும் சிலருக்கு டாஸ் ஜெயிப்பது சாபமாகவும் இருந்துள்ளது. ஆனால், டாஸ் என்பது போட்டியின் வெற்றி தோல்வியை தீர்மாணிக்கும் மிகப்பெரிய ஃபேக்டர் என்றால் மறுப்பதற்கில்லை. 

கோலியைப் பொருத்தவரை, அனைத்து கிரிக்கெட் ஃபார்மெட்களிலும் இந்தியா அணியை கனிசமான வெற்றிகளுக்கு அழைத்துச் சென்றிருந்தாலும், டாஸ் பொருத்தவரை பெரும்பாலும் அவருக்கு சாதகமாக இருந்திருக்கவில்லை.

கேப்டன் கோலி டாஸ் ரெக்கார்டு:

  டாஸ் வென்றது டாஸ் தோற்றது
டெஸ்ட் கிரிக்கெட்  28 37
ஒரு நாள் கிரிக்கெட்  40 55
சர்வதேச டி-20 கிரிக்கெட் 19 30
ஒரு நாள் உலகக்கோப்பை 4 5
சாம்பியன்ஸ் கோப்பை 3 2
டி-20 உலகக்கோப்பை 0 3
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 6 13

இப்படி, டெஸ்ட், ஒரு நாள், டி-20 என கிரிக்கெட் ஃபார்மெட்களில் டாஸ் வென்றதைவிடவும், டாஸ் தோற்றதன் எண்ணிக்கையே அதிகமாக உள்ளது கேப்டன் கோலிக்கு. இந்திய கிரிக்கெட் அணியின் மற்ற முன்னாள் கேப்டன்களோடு ஒப்பிடும்போது, டெஸ்ட், ஒரு நாள், டி-20 போட்டிகளில் வெற்றி சதவிகிதம் கேப்டன் கோலிக்கு அதிகமாக இருந்தாலும், டாஸ் என்ற ஃபேக்டரில் கோலி பின் தங்கி இருக்கிறார். இன்று கடைசி போட்டியில் களமிறங்கும் இந்திய அணிக்கு, டாஸ் லக் எப்படி இருக்கப்போகிறதோ? பார்ப்போம்!

மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...

ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண