உலககோப்பை டி20 தொடருக்கு பிறகு இந்திய அணி நியூசிலாந்து அணியுடன் டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் ஆடியது. இந்த தொடருக்கு பிறகு, இந்திய அணி தென்னாப்பிரிக்க நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்த நாட்டில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் ஆடுவதாக அறிவிக்கப்பட்டது.


விராட்கோலி தலைமையிலான இந்திய அணி தென்னாப்பிரிக்க நாட்டில் உள்ள செஞ்சூரியன் மைதானத்தில் அந்த நாட்ட அணியுடன் வரும் 26-ந் தேதி முதல் டெஸ்ட் போட்டியில் ஆட உள்ளது. இதற்காக, இந்திய அணி வீரர்கள் விமானம் மூலம் தென்னாப்பிரிக்க புறப்பட்டு சென்றனர். பி.சி.சி.ஐ. வௌியிட்ட புகைப்படத்தில் ஜஸ்பிரித் பும்ரா, ஷர்துல் தாக்கூர், முகமது சிராஜ், உமேஷ் யாதவ், புஜாரா, ரஹானே உள்ளிட்டோர் விமானத்தில் பயணிப்பது போல உள்ளது.




முன்னதாக, தென்னாப்பிரிக்க நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் ஆடுவதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், அந்த நாட்டில் ஏற்பட்ட ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு காரணமாக தென்னாப்பிரிக்க தொடர் ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து, தென்னாப்பிரிக்காவுடன் இந்திய அணி டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் மட்டும் ஆடும் என்று அறிவிக்கப்பட்டது.






விராட்கோலி தலைமையிலான இந்திய டெஸ்ட் அணியில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்த ரோகித் சர்மா, காயம் காரணமாக டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகினார். அவருக்கு பதிலாக பிரியங்க் பஞ்சல் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த தொடரில் இந்திய அணியின் ஒருநாள் போட்டிகளின் கேப்டன் பொறுப்பில் இருந்து விராட்கோலி நீக்கப்பட்டு, ரோகித் சர்மா புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.




தென்னாப்பிரிக்க அணியில் டீன் எல்கர், தெம்பா பவுமா, குயின்டின் டி காக், ரபாடா, கேஷவ் மகாராஜா, எய்டன் மார்க்ரம், நோர்ட்ஜே, வான்டர்டுசென் உள்ளிட்ட 21 வீரர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்திய தொடருக்காக தென்னாப்பிரிக்க அணியில் இடம்பிடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்திய அணியில் கேப்டன் கோலியுடன், கே.எல்.ராகுல், மயங்க் அகர்வால், ஸ்ரேயாஸ் அய்யர், ஹனுமா விஹாரி, ரிஷப்பண்ட், சஹா, அஸ்வின், இஷாந்த் சர்மா, ஷமி உள்ளிட்டோரும் இடம்பிடித்துள்ளனர்.


மேலும் படிக்க : Watch Video: டி20 உலகக்கோப்பை அணியில் அஸ்வின் வேண்டும் என்று கோலிதான் கேட்டார்- போட்டுடைத்த கங்குலி!


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண