ஐபிஎல் தொடரை அடுத்து, டி-20 உலகக்கோப்பை தொடர் தொடங்கியுள்ளது. நேற்று தொடங்கிய போட்டிகள் நவம்பர் 14-ம் தேதி வரை நடக்க உள்ளது. சர்வதேச துபாய் மைதானம், அபு தாபியில் உள்ள ஷேக் சையத் மைதானம், ஷார்ஜா மைதானம், ஓமன் கிரிக்கெட் அகாடெமி மைதானம் ஆகிய நான்கு மைதானங்களில் போட்டிகள் நடைபெற உள்ளது.  க்ரூப்:2 அணிகளுக்கான போட்டிகள் அக்டோபர் 24-ம் தேதி தொடங்க உள்ளது. முதல் போட்டியில், இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.


இந்நிலையில், இன்று நடைபெற இருக்கும் பயிற்சி ஆட்டத்தில் க்ரூப்:1-ல் இடம் பெற்றிருக்கும் இங்கிலாந்து - க்ரூப்:2-ல் இடம் பெற்றிருக்கும் இந்தியா மோத உள்ளன. துபாய் ஐசிசி அகாடெமி மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டி இந்திய நேரப்படி இன்று மாலை 7.30 மணிக்கு தொடங்க உள்ளது. இந்த போட்டி, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1, எச்டி, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 3, எச்டி, டிடி ஸ்போர்ட்ஸ், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் ஆகிய சேனல்களில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. அதுமட்டுமின்றி, ஹாட்ஸ்டார் ஆப் அல்லது இணையதளத்திலும் போட்டியை காணலாம்.






டி-20 உலகக்கோப்பைக்கு தேர்வான அணிகள் விவரம்:


சூப்பர் 12 க்ரூப் :1 இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்ரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், க்ரூப் ஏ வின்னர், க்ரூப் பி ரன்னர்.


சூப்பர் 12 க்ரூப்:2 இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆஃப்கானிஸ்தான், க்ரூப் ஏ ரன்னர், க்ரூப் பி வின்னர்.


இது தவிர, சூப்பர் 12-க்கான தகுதிச்சுற்று போட்டிகள் நடைபெற உள்ளது. இதில், இரு பிரிவுகளின் கீழ் 8 அணிகள் போட்டியிடுகின்றன. இதில் இருந்து ஒவ்வொரு பிரிவிலும், முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு தேர்ச்சி பெறும். 


தகுதிச்சுற்றில் போட்டியிடும் அணிகள் விவரம்:


க்ரூப்:  ஏ இலங்கை, ஐயர்லாந்து, நெதர்லாந்து, நமிபியா 


க்ரூப்: பி வங்கதேசம், ஸ்காட்லாந்து, பப்பா நியூ கினியா, ஓமன்.


இந்திய அணி போட்டிகள் விவரம்:


இந்தியா vsபாகிஸ்தான் ; அக்டோபர் 24, மாலை 6 மணி, துபாய்


இந்தியா vsநியூசிலாந்து ; அக்டோபர் 31, மாலை 6 மணி, துபாய்


இந்தியா vsஆப்கானிஸ்தான் ; நவம்பர் 3, மாலை 6 மணி, அபு தாபி


இந்தியா vsபி1 ; நவம்பர் 5, மாலை 6 மணி, துபாய்


இந்தியா  vsஏ2 ; நவம்பர் 8, மாலை 6 மணி, துபாய்


இதில், பி1 மற்றும் ஏ2 என குறிப்பிடப்பட்டுள்ள அணிகள் எது என்று இன்னும் முடிவாகவில்லை. முதல் சுற்றுப்போட்டிகளின் முடிவில் சூப்பர் 12 பிரிவுக்கு தேர்வாகும் அணிகள் இந்த போட்டிகளில் பங்கேற்கும். 


மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர