Rohit Sharma: இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் ரோகித் சர்மாவிற்கு ஆண் குழந்து பிறந்துள்ளதை அடுத்து பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளை பகிர்ந்து வருகின்றனர்.
ரோகித் சர்மாவிற்கு ஆண்-குழந்தை:
இதையடுத்து ரோகித் சர்மாவின் மனைவில் ரித்திகா முழு உடல் நலத்துடன் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் வெளியானதில் இருந்து ரோகித் சர்மா மற்றும் ரித்திகா ஜோடிக்கு பலரும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். குட்டி ஹிட்மேன் வந்துவிட்டதாக, ரோகித் சர்மாவின் ரசிகர்களில் இணையத்தில் வாழ்த்துகளையும், மீம்ஸ்களையும் பகிர்ந்து வருகின்றனர். ரோகித் சர்மா மற்றும் ரித்திகா ஜோடிக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை இருப்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2018ம் ஆண்டு பிறந்த அந்த குழந்தையின் பெயர் சமைரா. மனைவியின் பிரசவ தேதி நெருங்கி வந்ததன் காரணமாகவே, ரோகித் சர்மா பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடருக்காக இந்திய அணியுடன் ஆஸ்திரேலியா செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ரோகித்தின் திருமண வாழ்க்கை:
ரோகித்தும், ரித்திகாவும் டிசம்பர் 13, 2015 அன்று கிரிக்கெட், விளையாட்டு மற்றும் திரையுலகின் முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, தம்பதியினர் 2018 இல் சமைராவை வரவேற்றனர். இந்நிலையில் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு அவர்கள் மீண்டும் மகனை பெற்று பெற்றோராகியுள்ளனர். இந்த ஜோடி சமூக வலைதளங்களில் பிரபலமாக இருப்பதோடு, பல விளம்பர படங்களிலும் இணைந்து நடித்துள்ளனர்.
ரசிகர்கள் எதிர்பார்ப்பு
ரோகித் சர்மா மற்றும் ரித்திகா ஜோடி, கரருவுற்று இருந்தது பொதுவெளியில் அறிவிக்கப்படாமலேயே இருந்தது. இந்நிலையில், பெர்த்தில் நடைபெற உள்ள முதல் டெஸ்டில் ரோகித் பங்கேற்பது குறித்த நிச்சயமற்ற சூழலுக்கு மத்தியில் சமீபத்தில் தான் இந்த செய்தி பகிரங்கமானது. ரோகித்தும் ரித்திகாவும் தங்களின் புதிய குடும்ப உறுப்பினரின் வருகையை கொண்டாடும் நிலையில், தொடரின் தொடக்க ஆட்டத்தில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா அணியில் சேர்வாரா என்பதைப் பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். அவர் இல்லாதது இந்திய அணிக்கு சவாலாக இருக்கலாம். இந்த முக்கியமான தொடரின் போது ரோகித் தனது கிரிக்கெட் அர்ப்பணிப்புகளுடன் தனது குடும்பப் பொறுப்புகளையும் சமநிலைப்படுத்த முடியுமா என்பதைப் பார்க்க ரசிகர்கள் மற்றும் அணியினர் ஆர்வமாக உள்ளனர். இரு அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி, வரும் 22ம் தேதி தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
தயார் நிலையில் ரோகித் சர்மா:
இதனிடையே, அணியில் இருந்து விலகியிருந்தாலும், மும்பையில் ரோகித் சர்மா தொடர்ந்து வலை பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். அதன்படி, ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முக்கியமான டெஸ்ட் தொடருக்குத் தன்னைத் தயாராக வைத்திருப்பதை உறுதிசெய்துள்ளார். வீட்டில் திட்டமிட்டபடி விஷயங்கள் நடந்தால், ரோகித் சர்மா பெர்த்தில் முதல் டெஸ்டில் விளையாடலாம் என்று கூறப்படுகிறது. கடைசி நேரத்திலும் கூட இந்திய கேப்டன அணியில் இணைப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பிசிசிஐ உறுதி செய்து வருகிறது.