மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர் அமித் ஷா ஆகியோர் மீது இன்று சராமாரியாக விமர்சனங்களை அள்ளி வீசியுள்ளார்.  இந்த ஆண்டு ஐசிசி ஆடவர் உலகக் கோப்பையில் "பாவம் செய்தவர்கள்" கலந்து கொண்ட போட்டியைத் தவிர மற்ற அனைத்து போட்டிகளிலும் இந்திய கிரிக்கெட் அணி வெற்றி பெற்றுள்ளது எனக் கூறியுள்ளார். 


கொல்கத்தா, மும்பை:


அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நவம்பர் 19ஆம் தேதி நடைபெற்ற உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் இந்தியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த போட்டியினைக் காண பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா ஆகியோர் மைதானத்திற்கு நேரடியாக வந்தனர். 


கொல்கத்தாவில் இன்று அதாவது நவம்பர் 23ஆம் தேதி மேறு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, "உலகக் கோப்பையில் 'பாவம் செய்தவர்கள்' கலந்து கொண்ட போட்டியைத் தவிர அனைத்து போட்டிகளிலும் இந்திய கிரிக்கெட் அணி வெற்றி பெற்றது, "உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி கொல்கத்தா அல்லது மும்பையில் நடந்திருந்தால் அணி வென்றிருக்கும்" என குறிப்பிட்டுள்ளார். 


உலகக் கோப்பைத் தோல்வி:


ஆனால் பிரதமர் மோடி உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வியைத் தழுவிய பின்னர் பிரதமர் மோடி இந்திய அணியை ஊக்குவித்தார். அதில் அவர், ‘ இறுதிப்போட்டிவரை சிறப்பாக விளையாடிய உங்களுக்கு எனது பாராட்டுகள். நானும் இந்த நாடும் எப்போதும் உங்களுடன் இருக்கும்” எனக் கூறினார்.


உலகக் கோப்பை 2023இல் இந்திய அணி தனது 9 லீக் போட்டிகளிலும் வெற்றி பெற்று தோல்வியே சந்திக்காத அணியாக அரையிறுதிக்கு முன்னேறியது. அதேபோல் அரையிறுதியில் நியூசிலாந்து அணியையும் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இறுதிப் போட்டியில் இந்திய அணி 240 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலியா அணி 4 விக்கெட்டுகளை இழந்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதற்கு முன்னர் 2003ஆம் ஆண்டு உலகக் கோப்பையிலும் இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் இறுதிப் போட்டியில் மோதியது. அதில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. 


மம்தா பானர்ஜி கூறியதைப் போலவே இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் அந்த கருத்தினை தெரிவித்து வருகின்றன. போட்டியை நடத்தும் நாடு தனது அணி இறுதிப்போட்டியில் விளையாடுகின்றது என்றால் தனது அணிக்கு சாதகமான மைதானத்தில் போட்டியை நடத்தி உலகக் கோப்பையை வெல்ல முயற்சிக்கும். ஆனால் இந்தியா தனது பலத்திற்கு துளியும் ஒத்துப்போகாத நரேந்திர மோடி மைதானத்தில் போட்டியை நடத்தியதால்தான் தோல்வியைத் தழுவியது என்றும், உலகக் கோப்பையை வெல்லத் தகுதி இருந்தும் தவறவிட்டுள்ளது என்கின்றனர்.


அது மட்டும் இல்லாமல் உலகக் கோப்பையை இந்திய அணி தற்போதைய இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பெயரில் இந்திய அணி கோப்பையைக் கைப்பற்றி அதனை இந்திய பிரதமரிடம் இந்திய வீரர்கள் அளிக்கவேண்டும் என நினைத்து போட்டியை நடத்தி கோப்பையை கோட்டை விட்டுள்ளனர். தங்களுடைய அரசியல் லாபத்திற்காக இந்திய கிரிக்கெட் அணியை பலிகடா ஆக்கியுள்ளனர் எனவும் ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். 


ரசிகர்கள் கருத்துகள் இவ்வாறு இருப்பினும் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின்  காட்டமாஅன் விமர்சனம் அரசியல் தளத்தில் சூட்டைக் கிளப்பியுள்ளது.