இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி இன்று தனது 33ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருடைய பிறந்தநாளில் இந்திய கிரிக்கெட் அணி இன்று டி20 உலகக் கோப்பையில் ஸ்காட்லாந்து அணியை எதிர்த்து விளையாட உள்ளது. இந்தப் போட்டியில் இந்திய அணி சிறப்பான வெற்றியை பெற்று அவருக்கு நல்ல பிறந்தநாள் பரிசாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


இந்நிலையில் டி20 உலகக் கோப்பையில் ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி நடனம் ஆடும் வீடியோ வைரலாகி வருகிறது. அந்தப் போட்டியில் இந்திய அணியின் ஃபில்டிங்கின் போது மைதானத்தில் போடப்பட்ட பாட்டிற்கு நடனமாடும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. 






மைதானத்தில் எப்போதும் தன்னுடைய செய்கையால் விராட் கோலி ரசிகர்களின் பாராட்டை பெறுவார். பல முறை மைதானத்தில் ரசிகர்கள் இன்னும் ஆராவாரம் செய்ய வேண்டும் என்பது தொடர்பான சமீக்கைகளை ரசிகர்களை நோக்கி காட்டுவார். அதுவும் ரசிகர்களிடம் எப்போதும் வரவேற்பை பெறுவது வழக்கமான ஒன்று. அந்தவகையில் தற்போது மீண்டும் விராட் கோலியின் மைதான நடனம் வைரலாகி உள்ளது. 






அவரின் பிறந்தநாளை முன்னிட்டு பல வீரர்கள் தங்களுடைய வாழ்த்தை ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து வருகின்றனர். அதில் குறிப்பாக சேவாக்,”கடினமான சூழல்கள் நீண்ட நாட்கள் இருக்காது. ஆனால் கடினமான மனிதர்கள் எப்போதும் இருப்பார்கள். ஒரு நூற்றாண்டின் வீரர் விராட் கோலிக்கு என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துகள்” எனப் பதிவிட்டுள்ளார். 










மேலும் படிக்க: ட்ரெண்ட் செட்டிங் விராட் கோலியின் 5 முக்கிய பேட்டிங் மொமெண்ட்ஸ் லிஸ்ட்