இங்கிலாந்து-இந்தியா அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் நேற்றுடன் முடிவடைந்தது. நேற்று நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தந்து. இந்தப் போட்டியிலும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி 11 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்தப் போட்டிக்கு முன்பாக கோலி தேர்வு குறித்து கபில்தேவ் கருத்து ஒன்றை தெரிவித்திருந்தார். 


இந்நிலையில் நேற்றைய போட்டிக்கு பிறகு ரோகித் சர்மாவிடம் கபில்தேவ் இடம் கேட்கப்பட்டது. அதற்கு கேப்டன் ரோகித் சர்மா, “அவர் வெளியே இருந்து போட்டியை பார்த்து வருகிறார். அவருக்கு உள்ளே என்ன நடக்கிறது என்பது தெரியாது. நாங்கள் அணியை கட்டமைப்பதற்கு பின்பாக பல விஷயங்கள் உள்ளன. வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கி அவர்களுக்கு ஆதரவு அளிப்போம். இது பற்றி வெளியே இருப்பவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. ஆகவே வெளியே நடப்பது எதுவும் எங்களுக்கு முக்கியமானதில்லை. 




ஒரு வீரரின் ஃபார்ம் எப்போதும் ஒரு மாதிரியாக இருக்காது. அதில் சில ஏற்ற இறக்கங்கள் ஏற்படுவது வழக்கம். ஒரு வீரர் பல ஆண்டுகள் சிறப்பாக விளையாடி வந்த பின்பு ஒரிரு தொடர்களில் சிறப்பாக விளையாடவில்லை என்றால் அவர் நல்ல வீரராக இல்லை என்று கூற முடியாது. அவருடைய கடந்த கால ஃபார்மை நாம் பார்க்காமல் இருக்க முடியாது. அணியிலுள்ள எங்களுக்கு வீரரின் முக்கியத்துவம் தெரியும். இதுப்பற்றி வெளியே இருப்பவர்கள் பேசலாம். ஆனால் அதைப்பற்றி நாங்கள் கவலைப்பட தேவையில்லை”  எனத் தெரிவித்துள்ளார். 


 


முன்னதாக கபில்தேவ்,“இந்திய அணிக்கு ஃபார்மிலுள்ள பல்வேறு வீரர்கள் இருக்கும் பட்சத்தில் எதற்காக ஒரு அனுபவ வீரர் ஃபார்மில் இல்லாத போதும் களமிறக்கின்றனர். ஒருவர் அனுபவ வீரராக இருந்தாலும் அவர் தொடர்ச்சியாக 5 போட்டிகளுக்கு மேல் சொதப்பி வரும் போது அவருக்கு எதற்காக வாய்ப்பு அளிக்கப்பட்டு வருகிறது. சர்வதேச டெஸ்ட் தரவரிசையில் இரண்டாம் இடத்திலிருக்கும் பந்துவீச்சாளருக்கு அணியில் வாய்ப்பில்லை என்றால் பேட்ஸ்மேனுக்கு அதே நிலைதான் இருக்க வேண்டும். அவர் உங்களுடைய நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக இருந்தாலும் அவருக்கும் அணியில் வாய்ப்பு இல்லாமல் போக வேண்டும். அவர் சரியாக விளையாட வில்லை என்றால் மற்ற வீரர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும். அணி தேர்விற்கு வீரர்கள் இடையே போட்டி நிலவ வேண்டும். விராட் கோலி அணியின் முக்கியமான வீரராக உள்ளார். ஆனால் தற்போது அவர் அப்படி விளையாடுவதில்லை. ஆகவே அவரும் இதுகுறித்து யோசிக்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண