மேற்கிந்திய தீவுகள் நாட்டில் 19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்திய அணி யஷ் துல் தலைமையில் பங்கேற்று ஆடி வருகிறது. இந்த தொடர் தொடங்கியது முதலே சிறப்பாக ஆடி வந்த இந்திய அணி காலிறுதிக்கு முன்னேறியது.


இந்த நிலையில், ஆண்டிகுவா மைதானத்தில் நேற்று நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் வங்காளதேச அணியை காலிறுதியில் சந்தித்தது இந்தியா. டாஸ் வெனற இந்தியா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. ஆட்டம் தொடங்கியது முதலே இந்திய பந்துவீச்சாளர்கள் மிரட்டலான பந்துவீச்சை வெளிப்படுத்தினர்.




குறிப்பாக, இந்திய பந்துவீச்சாளர் ரவிக்குமார் அந்த அணியின் தொடக்க வீரர் மஹிபிஜூல் இஸ்லாமை 2 ரன்களில் போல்டாக்கினார். மற்றொரு தொடக்க வீரர் இப்தாக்ககர் ஹொசைனை 1 ரன்னிலும், அடுத்து வந்த பி.என்.நபிலை 7 ரன்களிலும் அடுத்தடுத்து அவுட்டாக்கி வெளியேற்றினார். மிடில் ஆர்டரில் களமிறங்கிய அய்ஷ் மொல்லா மட்டும் 48 பந்துகள் தாக்குப்பிடித்து 17 ரன்கள் எடுத்தார்.


இந்திய வீரர்கள் ரவிக்கமார், ராஜ்வர்தன் ஹங்கேர்கேகர், ராஜ் பாவா, விக்கி ஓஸ்ட்வால், கவுசல் தாம்பே மாறி, மாறி வங்கதேச வீரர்களுக்கு குடைச்சல் அளித்துக்கொண்டிருந்தனர். இதனால், வங்கதேச அணி 56 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்தது. டெயிலண்டர்களில்  எஸ்.எம். மெஹரூப் 30 ரன்களையும், அஷிகுர் ஜாமான்16 ரன்களையும் எடுத்ததால் அந்த அணி 100 ரன்களை கடக்க முடிந்தது. இறுதியில் வங்கதேச அணி 37.1 ஓவர்களில் 111 ரன்களை எடுத்தது.




112 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர் ஹர்னூர்சிங் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். அடுத்து ஜோடி சேர்ந்த ரகுவன்ஷி மற்றும் ஷேக் ரஷீத் சிறப்பாக ஆடினர். ரகுவன்ஷி 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஷேக் ரஷீத் 26 ரன்களிலும், கேப்டன் யஷ் துல் 20 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.


இறுதியில் இந்திய அணி 30.5 ஓவர்களில் 117 ரன்களை குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிப் பெற்றுள்ளது. இதன்மூலம் கடந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான உலககோப்பை இறுதிப்போட்டியில் வங்கதேசத்தில் தோல்வியடைந்ததற்கு இந்திய அணி பழிதீர்த்துள்ளது. இதன்மூலம் வரும் பிப்ரவரி 2-ந் தேதி இந்திய அணி ஆஸ்திரேலியாவை உலககோப்பை அரையிறுதிப் போட்டியில் சந்திக்க உள்ளது. இதுவரை 9 முறை நடைபெற்றுள்ள 19 வயதுக்குட்பட்டோருக்கான உலககோப்பை போட்டித்தொடர்களில் இந்திய அணி 7 முறை காலிறுதியில் வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண